world

img

ஜப்பான் : கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி

டோக்கியோ, அக்.25- ஜப்பானின் கியோட்டோ மாகாணத்தில் உள்ள ஓயாமாசகி நகர மேயர் தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் மேகேவா ஹிகாரு வெற்றி வெற்றுள்ளார். இந்த அவையில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களமிறங்கினர். அவர்களில் நான்கு  பேர் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களாவர்.  போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முதலிரண்டு இடங்களை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களே பெற்றனர். கடந்த அவையில் மேயரும், உறுப்பினர்களும் செய்த பணி மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்திருப்பதாக கட்சி கூறியிருக்கிறது.

 மேயருக்கான தேர்தலில் ஆளும்கட்சியின் ஆசியோடு களமிறிங்கிய வேட்பாளர் தோல்வியுற்றார். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு போட்டியிட்ட மேகேவா ஹிகாரு, பதிவான வாக்குகளில் 58.40 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மேயராகத் தேர்வாகியுள்ளார். கடந்த முறையும் இவர்தான் நகர மேயராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு, நர்சரிப் படிப்பில் சேர வேண்டிய வயதுள்ள குழந்தை கள் ஒருவர் கூட வீட்டில் இல்லாமல் பள்ளியில் சேர்க்கப்பட்டதைத் தங்கள் சாதனைகளில் ஒன்றாக ஹிகாரு தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். நகர மக்களே முதன்மையானவர்கள் என்ற கொள்கை யைத் தொடர்ந்து கடைப்பிடிப்பேன் என்றும் அவர் உறுதி யளித்தார்.