world

img

ஜப்பானில் மாடர்னா தடுப்பூசிக்கு தடை?  16 லட்சம் டோஸ்கள் நிறுத்தி  வைப்பு..  

டோக்கியோ 
ஜப்பான் நாட்டின் டகோ பார்மசிட்டியுக்கல் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசியான மாடர்னா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஜப்பான் நாட்டின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்து வருகிறது. நாடு முழுவதும் விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்காக டகோ நிறுவனம் அதிவேகமாக தடுப்பூசி தயாரித்து வருகிறது.  

இந்நிலையில், மாடர்னா தடுப்பூசியில் கலப்படம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூன்று பேட்ச் பண்டல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 16 லட்சம் டோஸ்கள் வீணாகுகிறது. இந்த தகவலை ஜப்பான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
மாடர்னா தடுப்பூசி மொத்தம் 2 டோஸ்களை கொண்டது. முதல் டோஸ் செலுத்திய பின்பு சுமார் 42 நாள் இடைவெளியில் 2-வது டோஸ் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

கலப்பட பிரச்சனையால் ஜப்பான் அரசு மாடர்னா தடுப்பூசிக்கு தடை விதிக்குமா? இல்லை கலப்படம் தொடர்பான ஆய்வை நடத்திய பின்னர்  மாடர்னா தடுப்பூசியை பயன்படுத்துமா? என்ற சந்தகம் எழுந்துள்ளது.   

;