world

img

ஆய்வுகளைத் தடுக்கும் முயற்சியா? ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

ஜப்பானின் மிகப்பெரிய ஆய்வு நிறுவனமான இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வு மையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒப்பந்த ஆய்வாளர்களைப் பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கைக்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் உள்ள இந்த ஆய்வு மையத்தில் 42 ஆய்வுக்குழுக்களை கலைக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்த 42 ஆய்வுக்குழுக்களில், 19 குழுக்கள் புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிப்பது மற்றும் மறதி நோய்க்கான காரணிகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவையாகும். இந்தக் குழுக்களில் உள்ள ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களாவர். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு இவர்களின் பணியை நிறுத்திக் கொள்வது என்று முடிவெடுத்திருகிறார்கள்.

இந்நிலையில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டமுரா டோமோகோ மற்றும் மியாமோடோ டகேஷி ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆய்வு மையத்தின் மூன்று பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டிருக்கிறார்கள். ஆய்வாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி என்ன நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 600 ஆய்வாளர்களின் வேலைகள் நீக்கப்பட உள்ளன என்ற பிரச்சனையைத் தீவிரமாகக் கையாளப்போவதாகவும் கூறியுள்ளனர்.

சமூகத்திற்கு மிகப்பெரிய அளவில் தேவைப்படும் ஆய்வுப் பொருட்களை இந்த ஆய்வாளர்கள் கையாண்டு வருகிறார்கள் என்று கூறிய டமுரா டோமோகோ, "உலகின் முன்னணி ஆய்வு நிறுவனத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளியானது ஒட்டுமொத்த சமூகத்திற்கே பேரிழப்பாகும். இது வெறும் ஆய்வாளர்களின் வேலையிழப்பு தொடர்பான பிரச்சனையல்ல. சமூகத்திற்கு இந்த ஆய்வு மையம் பெரும்பங்கை செலுத்துவதால் மக்களுக்குப் பொறுப்பானதாக இந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

;