world

img

பரவி வரும் தவறான தகவல்களால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு

பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்கள் உள்பட பல காரணிகளே உலகம் முழுவதும் கொரோனா அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு சனியன்று விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், கொரோனா முடிந்துவிட்டது, ஒமைக்ரான் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது, இதுதான் கொரோனா தொற்றின் கடைசி திரிபு என்பது போன்ற தவறான தகவல்கள் எல்லாம் மக்களிடையே பரவி நிறையக் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவே, கொரோனா தொற்று வளர வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒமைக்ரானுக்கு எதிராகவும், உயிரிழப்பு மற்றும் நோயின் தீவிர தன்மையைத் தடுப்பதிலும் தடுப்பூசி மிக சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. பிஏ.2 என்ற திரிபுதான் மிக வேகமாகப் பரவக் கூடிய திரிபாக இப்போது வரை உள்ளது. பிஏ.1 பிஏ.2 ஆகிய திரிபுகளை ஒப்பிடுகையில் தீவிரத்தன்மையில் வித்தியாசங்கள் இல்லை. பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் காரணமாக உயிரிழப்பும் அதிகரிக்கும் என தெரிவித்தார். 

;