world

img

சுவிட்சர்லாந்தில் கொரோனா  4வது அலைக்கு வாய்ப்பு 

பேர்ன்,
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் தொற்று எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அலைன்பெர்செட் சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 4வது அலைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 11 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த வாரம் 14, 811 பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது. இது கடந்த வாரத்தைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் அந்நாட்டில் இதுவரை 51 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனாவின் 4 வது அலை வந்தாலும் அதனைப் பெரிய அளவில் உயிரிழப்பு இன்றி எதிர்கொள்ள முடியும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அலைபெர்செட் தெரிவித்துள்ளார்.
 

;