world

img

உங்கள் பணி விண்வெளியை மனிதகுலத்தின் அமைதியான பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.... விண்வெளி நிலைய வீரர்களுடன் சீன ஜனாதிபதி பேச்சு....

பெய்ஜிங்:
உங்கள் பணி விண்வெளியை மனித குலத்தின் அமைதியான பயன்பாட்டுக்குகொண்டு வருவதில் முக்கிய பங்குவகிக்கும் என்று விண்வெளிநிலை யத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேரடியாகப் பேசினார்.விண்வெளியில் விண்வெளி நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு நீ ஹைசெங், லியு போமிங், டாங் ஹோங்போ ஆகிய 3 வீரர்களையும் கடந்த 17 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது. சீன விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 விண்வெளி வீரர்களும் அடுத்த 3 மாதங்களில் ‘தியாங்காங் ஹெவன்லி பேலஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த விண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பார்கள். இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 விண்வெளி வீரர்களுடனும் ஜனாதிபதி  ஜி ஜின்பிங் புதனன்று  பெய்ஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முதல் முறையாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அவர்களது விண்வெளி ஆய்வுப்பணிக்காக ஜி ஜின்பிங் நன்றி தெரி வித்தார்.அப்போது ஜின்பிங் அவர்களிடம் பேசுகையில் , “நீங்கள் 3 மாதங்கள் விண்வெளியில் செலவிடுவீர்கள். விண்வெளியில் இருக்கும்போது நீங்கள் செய்யும் வேலையும், உங்கள்வாழ்க்கையும் சீன மக்களின் இதயங்களில் இருக்கும். நமது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். இது விண்வெளியை மனித குலத்தின் அமைதியான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று தெரிவித்தார். இந்த உரையாடல் சீன அரசு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

;