அமெரிக்கா எச்-1பி விசாவிற்கான கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் சீனா புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
எச்-1பி விசா என்பது அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா வழங்கும் விசா ஆகும். பிற நாட்டு திறமையாளர்களை அமெரிக்காவின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள 1990 ஆம் ஆண்டு இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போது அமெரிக்கர்களுக்கே முதல் முன்னுரிமை என்ற முழக்கத்தை எழுப்பி ஆட்சிக்கு வந்த டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பரஸ்பர வரி விதிப்பால் அமெரிக்காகவே அதிகம் பாதிப்படைகிறது என்று சொல்லி பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார் டிரம்ப்.ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று கூறி 25 சதவிகிதம் ஏற்றுமதி வரி விதித்தார்.இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு தொழில்நகரங்களில் இருந்து உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இதனால் பல நாட்டினர் பாதிக்கபட்டாலும், அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள் தான். எச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 70 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.
இப்படியான சூழலில் சீனா தற்போது கே விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த விசா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் இளைஞர்களுக்கான விசாவாக எடுத்துகொள்ளலாம்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பட்டதாரிகள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் இந்த் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வெளிநாட்டு இளம் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் சீனாவிற்கு வருவதை எளிமையாக்கவும், இளம் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பத்திரிகையாளர் சந்திப்பில் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா எச்-1பி விசா கட்டணத்தை அதிகரித்திருக்கும் நிலையில், சீனா அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த விசா நடைமுறை இந்தியா உள்ளிட்ட பிற நாட்டினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.