world

img

சீனா; சந்தை கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி  

சீனாவில் ஒரு சந்தை கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.  

வடகிழக்கு சீனா டேலியன் நகரில் உள்ள ஒரு சந்தை கட்டிடத்தின் அடிதளத்தில் வெள்ளிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ, சுமார் 2 மணி நேரம் நீடித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து கட்டிடத்தின் அடிப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;