பெர்லின், நவ.8- ஜெர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டி யன் லிண்ட்னரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ஒலாஃப் சோல்ஸ் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆளும் கூட்டணி உடைந்துள்ளது. இந்நிலையில் அதிபர் ஒலாஃப் சோல்ஸ் இன் ஆலோசகராக இருந்த ஜோர்க் குக்கீஸ் புதிய நிதி அமைச்ச ராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியில் சமூக ஜனநாய கக் கட்சி (SDP), பசுமைக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) ஆகி யவற்றின் கூட்டணி ஆட்சி நடை பெறுகிறது. கடந்த சில மாதங்களா கவே கார்ப்பரேட்களின் மீதான வரி விதிப்பு தொடர்பான கொள்கை குறித்து அதிபருக்கும் சுதந்திர ஜனநாய கக் கட்சியை சேர்ந்த நிதி அமைச்சருக் கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. அமெரிக்கா உத்தரவின் அடிப்ப டையில் ஜெர்மன் விதித்துள்ள ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை கள், இஸ்ரேல் மற்றும் உக்ரைனு க்கு செய்யும் அதிக ராணுவச் செல வுகள் காரணமாக ஜெர்மன் மக்கள் பொருளாதாரச் சுமை அதிகரித்து பல நெருக்கடிகளை சந்தித்து வரு கின்றனர். ஆளும் அரசின் மீது மக்க ளின் கோபம் அதிகரித்து வந்த நிலை யில் தான் அதிபர் ஒலாஃப் சோல்ஸ் கார்ப்பரேட் வரிகளை உயர் த்துவது தொடர்பாக முன்மொழிவு களை கொண்டு வந்தார். ஆனால் தீவிர முதலாளித்துவ வாதியான நிதி அமைச்சர் கிறிஸ்டி யன் லிண்ட்னர் அந்த முன்மொழிவு களை நிராகரித்து வந்தார். அதே போல மக்கள் நலத்திட்டங்களுக் கான நிதிகளை வெட்ட வலியுறுத்தி வந்தார். இந்த மோதலே தற்போது அங்கு ஆளும் கூட்டணியை உடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு தந்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றுள் ளது. இதனால் அந்நாட்டு நாடாளு மன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பை நோக்கி செல்கிறது. தற்போதைய கருத்துக் கணிப்பு கள் படி அதிபர் ஒலாஃப் சோல்சின் சமூக ஜனநாயகக் கட்சி 14 சதவீத வாக்குகளையே பெற முடியும் என்று தெரிவித்துள்ளன. இந்த பின்னடைவு அங்குள்ள தீவிர பழமைவாத மற்றும் வலதுசாரி க்கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) கட்சிக்கு தற்போது 30-34 சத வீதம் வரை வாக்குகள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்புகள் தெரி விக்கின்றன. அமெரிக்காவின் உத் தரவுகளுக்கு கட்டுப்பட்டு இயங்கி வருகின்ற ஐரோப்பிய நாடுகளில் தொடர் பொருளாதார நெருக்கடி கள் உருவாகி வருகின்றன. இந்த நெருக்கடிகள் ஆளும் முதலாளித்துவ அரசுகளுக்கு வீழ்ச்சியை கொடுத்தாலும், அந்த சூழல் தீவிர அமெரிக்க சார்பு கொண்ட பிற்போக்கு அல்லது தீவிர முதலாளித்துவக் கட்சிகளே தேர்த லில் வெற்றிபெற வழிவகுக்கிறது.