world

img

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: சிலியின் புதிய அதிபர் காப்ரியல் போரிக் உறுதி

சிலியின் புதிய அதிபராக பொறுப்பேற்க இருக்கும் காப்ரியல் போரிக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நடைபெற்ற ஜனாபதித் தேர்தலில் இடதுசாரி மாணவர் தலைவரான காப்ரியல் போரிக் வெற்று பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் காப்ரியல் போரிக் 55.9 விழுக்காடு வாக்குகள் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு காப்ரியல் போரிக் பேசியதாவது: சிலியில் சர்வாதிகார ஆட்சி முறைக்கு முடிவு கட்டியுள்ளோம். சமூக ஜனநாயக ஆட்சி முறை அமல்படுத்தப்படும். தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

குறிப்பாக வறுமை ஒழிப்பு, சமத்துவ சமூகம், புதிய அரசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக முக்கியத்துவம் அளிப்போம் என பேசினார். சிலியின் மிக குறைந்த வயதுடைய அதிபர் என்ற பெருமையை காப்ரியல் போரிக் பெற்றுள்ளார்.

;