world

img

உலகின் மிகப்பெரிய விலங்குகள் கணக்கெடுப்பு..

நைரோபி:
கென்யா நாட்டில் உலகின் மிகப்பெரிய விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.சர்வதேச அளவில் ஆப்ரிக்க காடுகளில்வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.  இங்கு யானைகள், சிங்கங்கள் உள்ளிட்ட பல வன விலங்குகளும் டால்பின்கள், சுறாக்கள், மற்றும் கடல் ஆமைகளும் அதிக அளவில் உள்ளன.குறிப்பாக கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யா நாட்டில் உள்ள காடுகளில் பல அபூர்வ வகையைச் சேர்ந்த வன விலங்குகள் வசித்து வருகின்றன.   இவற்றில் சிங்கங்கள், ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் வெள்ளை காண்டா மிருகங்கள்அடங்கும்.இங்குள்ள கடல்  வழியாக ஏராளமான சுறாக்கள், டால்பின்கள் மற்றும் அரிய வகை ஆமைகள் வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றன. எனவே இங்கு உலகின் மிகப்பெரிய விலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச வனத்துறை அறிவித்துள்ளது.

;