world

img

மெக்சிகோவுக்கு 90 லட்சம் தடுப்பூசிகள் கியூபா அனுப்புகிறது

ஹவானா, செப். 8- கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள கியூபாவில் தயாரிக்கப் பட்ட அப்தலா தடுப்பூசியை மெக்சிகோ கேட்டு வாங்குகிறது. வளர்ந்த நாடுகள் கூட கொரோ னா பெருந்தொற்றை எதிர்கொள்வ தற்கான தடுப்பூசியை தயாரிக்க முடியாமல் இருந்தபோது, தனது சொந்த ஆய்வாளர்களைக் கொண்டு  சில தடுப்பூசிகளை கியூபா உரு வாக்கியது. அதன் திறன் பற்றிய  ஆய்வுகளை எல்லாம் முடித்து,  ஆய்வறிக்கைகளை உலக சுகா தாரக் கழகத்திடம் ஒப்படைத்த போதும், இதுவரையில் மருந்துகளை அங்கீகரிக்காமல் இருந்து வரு கிறார்கள். ஆனால் பல நாடுகள் கியூபாவிடமிருந்து தடுப்பூசிகளை வாங்கி தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்நிலையில், மெக்சிகோவின் இடதுசாரி அரசு, 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழு வதும் உள்ள 1 கோடியே 53 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப் போகிறார்கள். ஒவ்வொரு குழந்தை க்கும் மூன்று தவணை தடுப்பூசி கள் போடப்படும். இதற்காக முதற் கட்டமாக 90 லட்சம் தடுப்பூசி களை கியூபாவிடம் கேட்டு வாங்கு கிறார்கள். 30 லட்சம் குழந்தை களுக்கு இந்தத் தடுப்பூசிகளைப் போடுவது அவர்களின் திட்டமாகும். அதோடு, ஃபிஷர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி மருந்து களையும் வாங்குகிறார்கள். 80 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தென் கொரியா  வாங்கித் தருகிறது. தடுப்பூசி போடு வதில் மெக்சிகோ நல்ல முன்னேற்ற த்தைக் கண்டு வருகிறது. அனைத்து வயதினரில் இதுவரையில் 82 விழுக்காடு பேருக்கு குறைந்த பட்சம் ஒரு தவணை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. 18 வய துக்கு மேற்பட்டவர்களில் 91 விழுக் காட்டினருக்கும், 12 முதல்  17 வயதினரில் 64 விழுக்காட்டி னருக்கும், 5 முதல் 11 வயதினரில் 45  விழுக்காட்டினருக்கும் தடுப்பூசி  மருந்துகள் செலுத்தப்பட்டி ருக்கின்றன. இதனால் தற்போது 5 வயது முதல் 11 வயது வரையிலான வர்களுக்கு தீவிரமான கவனம் எடுக்கிறார்கள்.

கியூபாவின் சாதனை

உலக சுகாதாரக் கழகம் கியூபா வின் மருந்துகளுக்கு இதுவரையில் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் ஓராண்டிற்கு முன்பாகவே கியூபாவிடமிருந்து மருந்துகளை மெக்சிகோ வாங்கியது. அதிகமான வயதுள்ளவர்களுக்கு போட்ட தடுப்பூசி மருந்துகளில் கியூபாவிட மிருந்து வாங்கிய மருந்துகளும் இருந்தன. கியூபாவின் மரபணு  பொறியியல் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் மையம் இந்த அப்தலா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. கியூபா தயாரித்துள்ள இந்த அப்தலா தடுப்பூசி மருந்தின் திறன்  92.28 விழுக்காடு என்று ஆய்வுக் கூடங்களில் மேற்கொண்ட பரிசோத னைகள் வாயிலாகத் தெரிய வந்திருக் கிறது. தொடக்க கட்டத்தில் மட்டு மல்லாமல், இடையிடையே இந்த  மருந்தின் தடுப்புத்திறன் பற்றிய ஆய்வுகளை கியூப மருத்துவ உலகம் செய்து கொண்டே இருக்கிறது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 19 வயது முதல் 80 வயது வரையிலான 48 ஆயிரம் தன்னார்வலர்கள் இந்த பரிசோதனை யில் பங்கேற்றனர். அவர்களுக்கு தடுப்பூசி மருந்தைச் செலுத்தி பரிசோ தனை செய்ததில், நோய் பாதித்தா லும் அதிலிருந்து மீள்வது விரைவு படுத்தப்பட்டது தெரிய வந்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைக்காமல் நெருக்கடியான சூழல் இருந்து வந்தது. வளர்ந்த நாடுகள்  தடுப்பூசிகளை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளவே முயற்சித்தன. இந்நிலையில், 20 கோடி தடுப்பூசி மருந்துகளை ஏழை நாடுகளுக்கு வழங்குவோம் என்று கியூபா அறிவித்தது. அதை நிறைவேற்றவும் செய்கிறது. குறிப்பாக கரீபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கியூபாவில் இருந்து தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. தென் அமெரிக்காவில் சில நாடு களும் கியூபாவின் தடுப்பூசி மருந்து களுக்கு முக்கியத்துவம்கொடுத்தன.
 

;