world

img

கனடா : அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கு தடை

கனடாவில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனீகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு' என்ற பெயரில் இந்த தடுப்பூசியை விநியோகம் செய்து வருகின்றனர்.
அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக கூறி சில ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தடை விதித்தது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியமருந்து ஆணையத்தின் அறிவுறுத்தலை ஏற்று, சில நாடுகளில் மட்டும் தடை விலக்கி கொண்டது.

மேலும், அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்று நோய்கள் அமைப்பு கடந்த வாரம் கூறியதாவது, 

"கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அமெரிக்காவிடம் அளித்த புள்ளிவிவரங்கள் போதுமானதாக இல்லை. முழுமையான விவரங்களை அளிக்க வேண்டும்" என்று கூறியது..
இதனால் "55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியை போட வேண்டாம்" என்று கனடா நாட்டின் தேசிய நோய் எதிர்ப்பு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி. கனடா நாட்டில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டுள்ளது.

;