world

img

மக்கள் போராட்டமே தீர்வு

பெல்கிரேடு, டிச.2- ஐரோப்பிய நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் ஐரோப்பிய இளம் கம்யூனிஸ்டுகளின் அமைப்புகள் (மெக்யோ) கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அண்மைக்காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் இளம் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. பிரிட்டன், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் அவர்களின் தலையீடுகள் அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்களின் செயல்பாடுகளில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, தேவைப்படும் பிரச்சனைகளில் ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்துவது பற்றியும் ஆலோசிக்க பெல்கிரேடில் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.

கொரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடு களில் இருந்து 21 புரட்சிகர இளம்  கம்யூனிஸ்டுகளின் அமைப்புகள் பங்கேற்றன. இரண்டு நாட்கள் நடை பெற்ற கூட்டத்தில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதித்தனர். அவரவர் நாடுகளில் எழுந்த பிரச்சனைகளை எப்படிக் கையாண்டோம், அதில் கிடைத்த வெற்றி மற்றும் தோல்விகளைப் பற்றி வெளிப்படையான விவாதம் நடந்தது. “சோசலிசம் உருவாக மக்கள் போராட்டமே தீர்வு” என்ற முழக்கத்து டன் பெல்கிரேடில் உள்ள குடியரசுச் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்ட த்தில் பங்கேற்க வந்த அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் ஏகாதி பத்தியப் போர்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களே சோசலிசத்திற்கு வழிவகுக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அமெரிக்க ராணுவக் கூட்டணியான நேட்டோவுக்கு எதிரான முழக்கங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. யூகோஸ்லேவியாவின் புதிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் செர்பிய கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் இந்த  ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்ட னர். யூகோஸ்லேவியா புதிய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் பஞ்சனாக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தோழர்கள் மிக்கைல் மற்றும் அலெக்சாண்டர் கொனோனோவிக் ஆகிய இருவருக்கும் தங்கள் ஆதரவை பிரதிநிதிகள் தெரி வித்துக் கொண்டனர். இந்த இருவரும் சகோதரர்களாவர். உக்ரைன் இளம் கம்யூனிஸ்டுகள் லீக் அமைப்பைச் சேர்ந்த இருவரையும் உக்ரைன் அரசு  கைது செய்து சிறையில்அடைத்துள்ளது. இதேபோன்று, ஐரோப்பிய யூனி யனின் பல நாடுகளில் கம்யூனிஸ்டு களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நடக்கின்றன. இந்த ஒடுக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் மக்க ளைத் திரட்டிப் போராடுவதற்கான பணி  முடுக்கிவிடப்படும் என்றும் எச்சரித்த னர். யூகோஸ்லேவியாவில் நிலவும்  ஒடுக்குமுறைச் சூழலுக்குக் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் அமைக்கப் பட்டுள்ள அமெரிக்க ராணுவ முகாம் களை அகற்ற வேண்டும் என்றும், உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்கு அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என்றும் தீர்மானங்கள் போடப்பட்டன. இத்தகைய கூட்டங் களை மீண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பங்கேற்ற பிரதிநிதிகள் அனைவருமே வலியுறுத்திப் பேசினர்.

;