world

img

தீக்கதிர் உலக செய்திகள்

 உலகத்தை “காலநிலை நரகத்தில்”இருந்து காக்க ஐ.நா அழைப்பு 

உலகம் “காலநிலை நரகத்தில்” இருப்பதைத் தவிர்க்க உடனடியாக தீவிரமான நடவடிக்கைகளை  எடுக்குமாறு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். கோபர் நிக்கஸ் வெளியிட்ட அறிக்கையில் கடந்த மே மாதம் உலகம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான வெப்பத்தை சந்தித்துள்ளது என குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில்  “இது காலநிலை நெருக்கடியின் காலம்”  இதனை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உலகளவு அதிகரித்துள்ளது என குட்டரெஸ் கூறியுள்ளார். 

ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கட்டாய இடப்பெயர்வு 

ஹைட்டியில் நடைபெறும் உள்நாட்டு போரின் கார ணமாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கட்டாயமான முறையில் இடப்பெ யர்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஐ.நா குழந்தைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைட்டி உள்நாட்டு போரில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிக மான மக்கள் கட்டாயமான முறையில் இடம்பெயர்ந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் குழந்தைகள் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பலி எண்ணிக்கையை மாற்றிக் கூறிய கென்யா அரசு 

சர்வதேச நாணய நிதியத்தின் ஏகாதி பத்திய நலன் சார்ந்த புதிய பொருளா தார மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் 39 கென்யர்கள் உயிரி ழந்துள்ளனர். 32 பேர் மாயமாகி உள்ளதாக வும், 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் 620-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர் எனவும் தற்போது கென்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது. முன்னதாக அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ 19 பேர் மட்டுமே பலியானதாக கூறியது குறிப்பிடத்தக்கது.



 

;