ரியாத், ஜூலை 12- மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் 30,000 கோடி டாலர்களை உக்ரைனுக்கு கொடுத்தால் ஐரோப்பிய கடன் பத்திரங்களை சவூதி அரசு விற்பனை செய்யக் கூடும் என சர்வதேச செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய பிறகு ரஷ்யாவின் 30,000 கோடி டாலர் சொத்துக் களை ஏகாதிபத்திய நாடுகள் முடக்கி விட்டன. முடக்கப்பட்ட இந்த சொத்துக்களை தற்போது கைப்பற்றி உக்ரைனுக்கு வழங்கலாம்; அதன் மூலம் ஆயுத விற்பனையை அதிகரிப்பதுடன் ரஷ்யா மீதான போரை மேலும் தீவிரப் படுத்தலாம் என திட்டமிட்டன.
இதற்காக கடந்த சில மாதங்களாக ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றி உக்ரை னுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தச் சூழலில் ரஷ்யாவின் சொத்துக்க ளைக் கைப்பற்றும் முயற்சி குறித்து சவூதி அரசு கவலை கொண்டுள்ளதாகவும் சவூதி அரசு, சீனா மற்றும் இந்தோனேசியாவுடன் இணைந்து ரஷ்யாவின் சொத்து பறிமுதல் செய்வதை தடுக் ்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பொலிட்டிக் கோ என்ற பத்திரிகையும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் சொத்துக்களைப் பறிக்கும் இந்த நடவடிக்கை நிறைவேறினால் வரும் நாட்களில் நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் விரோதத் தின் அடைப்படையில் இது போன்ற சொத்து பறிமுதல் நடவடிக்கைகளை ஏகாதிபத்திய நாடு கள் ஆயுதங்களாக பயன்படுத்தும் அத்துமீறல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சவூதி எடுத்துள்ள முயற்சி அதனை தடுக்க உதவும். மேலும் இந்த நடவடிக்கைகள் தெற்குலக நாடுகள் ஜி-7 நாடுகளிடையே அதிகரித்து வரும் இடைவெளியைக் காட்டுவதாகவும் உள்ளது என கூறப்படுகிறது.
எனினும் சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் இது போன்ற எந்த எச்சரிக்கை யையும் நாங்கள் கொடுக்கவில்லை. ஜி-7 நாடு கள் உட்பட அனைவருடனும் சுமூகமான உறவை பேணவே விரும்புகிறோம் என தெரிவித்துள் ளது குறிப்பிடத்தக்கது.