அபுஜா,ஏப்.21- நைஜீரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தால் வறுமை தீவிரமான நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் மக்கள் உணவுக் கிடங்குகளை கொள்ளை யடித்து தானியங்களை எடுத்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வரு கிறார்கள். இதனால் வறுமை சூழ்ந்த நாடாக நைஜீரியா உருமாறியுள்ளது.
அந்நாட்டு மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உணவின்றி வறுமையில் தள்ளப்பட்டுள்ள னர். அந்நாட்டின் கேப்பி மாநிலத்தில் மட்டும் பெண்கள், குழந்தைகள் என 5 லட்சம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசமான உணவுப் பற்றாக்குறை சூழல் காரணமாக நிவாரணப்பொருட்களை ஏற்றி வரும் லாரிகளையும் உணவு தானியங் களை சேமித்து வைத்துள்ள கிடங்குகளை யும் கொள்ளையடித்து தங்கள் குடும்பத்தின ருக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
1.86 கோடி நைஜீரிய மக்கள் கடுமையான வறுமையில் அவதிப்படுகிறார்கள் என ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அமைப்பின் தகவலின்படி தெரிய வந்துள்ளது. மேலும் 4.37 கோடி மக்கள் இந்த வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. உணவு விலைகள் பல மடங்கு அதி கரித்ததே வறுமைக்கு காரணமாகும். குறிப்பாக 2023 பிப்ரவரி மாதம் 25 சத வீதமாக இருந்த உணவு பொருட்களின் பணவீக்கம் 2024 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் மத்திய வங்கியின் காலாண்டு அறிக்கைகளின் படி அகமது பெல்லோ பல்கலைக்கழகத்தின் பொருளா தார நிபுணர் எரிக் ஓட்டோக்கியா வெளி யிட்டுள்ள ஆய்வின்படி, 2023 மே மாதம் அரசாங்கம் எரிபொருள் மானியங்களை அகற்றியதே இந்த உணவுப் பணவீக்கத் திற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று என தெரிய வந்துள்ளது.
மேலும் சர்வதேச நாணய வர்த்தக அமைப்பிடம் அந்நாடு பெற்றுள்ள கடனின் அடிப்படையில் தாராளமயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமலாக்க வேண்டிய கட்டாயமும் அந்நாட்டிற்கு உருவானது. எரிபொருள் மானியத்தை நீக்கியதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாடுகளே காரணம் என கூறப்படுகிறது.