60 ஆவது முனீச் பாதுகாப்பு மாநாடு பிப்ரவரி 16 அன்று ஜெர்மனியின் முனீச் நகரில் துவங்கியது. 1963 ஆம் ஆண்டு முதல் சர்வதேச பாதுகாப்புக் கொள்கை கள் குறித்து விவாதிக்க ஆண்டுக்கு ஒரு முறை இம்மாநாடு நடத்தப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் உலக நாடுகளின் வெளியுறவு,பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என 180 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள் ளனர்.