world

img

இஸ்ரேலுக்கு எதிரான வரலாற்று வழக்கு விசாரணை

ஹேக்,ஜன.11- பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரை  கண்டித்து தென் ஆப்பிரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 2023 டிசம்பர் 29 அன்று வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணை  வியாழக்கிழமையன்று  சர்வதேச நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது. இந்த வழக்கிற்கு பொலிவியா,பிரே சில்,பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள 11 நாடுகள் உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

2023 அக்டோபர் 7 அன்று போர் துவங்கிய தில் இருந்து தற்போது வரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணு வம் படுகொலை செய்துள்ளது.இதில் 50 சத வீதத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள்.   சர்வதேச நீதிமன்றம்  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்ப்ப தற்காக நெதர்லாந்து நாட்டின் தலைநகர் தி ஹேக்கில் நிறுவப்பட்ட சர்வதேச நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நீதித்துறை அமைப்பாக உள்ளது. 15 நீதிபதிகளை கொண் டுள்ள நீதிமன்றத்தின் தலைவராக அமெரிக்கா வை சேர்ந்த  ஜோன் டோனோகுவே உள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து சர்வதேச நீதிமன்றம் சற்று வேறுபட்டது. இது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை மீறிய  நபர் களை விசாரிக்கும் ஒரு புதிய அமைப்பாகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சர்வதேச குற்றவி யல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்க வில்லை.