world

img

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி 16 பேர் மாயம்


இந்தோனேசியா ஜாவா தீவில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியான நிலையில் 16 பேர் மாயமாகியுள்ளனர்.இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா, நங்கஜீக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில்  பெய்த மழையால் சுற்றியுள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இது குறித்து தேசிய பேரிடர் தொடர்பாளர் ராதித்யா ஜதி கூறியதாவது:
நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தன்னார்வலர்கள், பாதுகாப்பு வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். குறைந்தது எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 14 பேர் காயமடைந்த நிலையில் 21 பேர் மண்ணில் புதைந்தனர். இதில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர், படுகாயம் அடைந்த பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து காணாமல் போன கிராம மக்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
மேலும் மோசமான வானிலை மற்றும் உரிய உபகரணங்கள் இல்லாததால் தேடும் பணி முடங்கியுள்ளது.
ஒரே நாளில் பெய்த கன மழையால் மாகாணத்தில் உள்ள பிற மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தோனேசியாவில் பருவ மழையால் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்தார். 

;