world

img

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 
உலக சுற்றுச்சூழல் தினம் என்பது இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கியத்துவத்தை உலகளாவிய அளவில் உணர்த்தும் நாள் ஆகும். இது 1972-ஆம் ஆண்டு ஸ்டோக்ஹோமில் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டின் போது ஆரம்பிக்கப்பட்டது, மேலும் 1973 முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சுற்றுச்சூழல் சம்பந்தமான தலைப்பில் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு - நில மறுசீரமைப்பு, வறண்ட நிலங்கள் மற்றும் வறட்சியிலிருந்து மீள்வதற்கான திறன் என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.