world

img

“மக்கள் விழித்து விட்டார்கள்” - லிமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி

கொடூரமான அடக்குமுறை

ஜனநாயகத்தை மீட்கப் போராடும் மக்கள் மீது கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் மக்களை விலங்குகளை மாட்டி, குப்புறப்படுக்க வைத்து நீண்ட நேரம் அப்படியே விட்டு விடுகிறார்கள். மக்களின் உடல்கள் ஒத்துழைக்க மறுக்கும் வரையில் காத்திருந்து, அவர்களின் உறுதியைக் குலைக்க முயற்சிக்கிறார்கள். பெரு முழுவதும் போராட்டங்கள் பரவி வருவதால் அடக்குமுறையால் அவற்றை ஒடுக்க ஜனாதிபதி போலுவார்ட்டே தலைமையிலான அரசு முனைப்பு காட்டுகிறது.

வைரலான டுவீட்

“அவசரம்... உலகம் முழு வதும் நாடுகளின் மீது படையெடுத்து அங்கெல்லாம் கனிம வளங்களைக் கொள்ளையடித்த அமெரிக்கப் படையல்ல இது. ஒரு வரையொருவர் தாக்கிக் கொள்ள அவரவர் நிலைகளில் நிற்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைக ளும் அல்ல. இது பெருவின் ராணு வம். புனோ மாகாணத்தில் மக்க ளைப் படுகொலை செய்வதற்காக வந்திருக்கிறது. பெருவில் சர்வாதி காரம் தலைவிரித்தாடுகிறது” புனோ மாகாணத்திற்குள் திடீரென்று பெரு ராணுவம் புகுந்தது. இதை மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ நடக்கப் போகிறது என்ற அச்சத்தில் இருந்தனர். சமூக வலை தளங்களில் ராணுவம் புகும் காட்சி கள் பரப்பப்பட்டன. மேலேயுள்ள டுவீட்டை ஒரு குடிமகன் பதிவிட்டார். அது பெரும் அளவுக்கு வைரலாகி யது.

புதிய ‘‘கதை’’

நாடு முழுவதும் ஏற் பட்டுள்ள எழுச்சி கரமான போராட்டங்களை ஒடுக்கும் அரசின் நடவடிக் கைகளால் இதுவரையில் 62 பேர் கொல்லப்பட்டி ருக்கி றார்கள். இந்தக் கொலை கள் பற்றி அந்நாட்டின் ஜனாதிபதி போலுவார்ட்டே புதிய கதை ஒன்றை சொல்லி வருகிறார். இறந்தவர்களை பெருவின் பாதுகாப்புப் படை யினர் சுடவில்லை என்றும், சக போராட்டக்காரர்களே சுட்டுவிட்டார்கள் என்றும் அவர் கூறிக் கொண்டிருக்கி றார். கொல்லப்பட்ட சம்ப வங்களில் பலவற்றிற்கு காணொலி ஆதாரங்களே வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

லிமா, ஜன.28- பெருவில் அந்நாட்டு அரசின் அடக்குமுறைகளை மீறி தலை நகர் லிமாவில் ஆயிரக்கணக் கான மக்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை ஜனாதி பதி பதவியில் இருந்து நீக்கியதைக் கண்டித்து பெரு முழுவதும் மக்கள் போராட்டக் களத்தில் இருக் கிறார்கள். சிறையில் அடைக்கப் பட்டுள்ள காஸ்டில்லோவை விடு தலை செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தை உடனடியா கக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி வருகிறார் கள். இந்தக் கோரிக்கையை தற் போதைய ஜனாதிபதி போலு வார்ட்டே தலைமையிலான அரசு ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தலைநகர் லிமாவை நோக்கி மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தலைநகர் லிமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி நடந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இவ்வளவு பெரிய பேரணியைத் தாங்கள் கண்ட தில்லை என்று ஊடகங்கள் எழுது கின்றன. மக்களின் இந்த எழுச்சியைக் கட்டுப்படுத்த ராணு வம் இறக்கி விடப்பட்டிருக்கிறது. ஆனாலும், போராட்டங்களின் வீச்சு குறையவில்லை. மாறாக, அதிகரித்து வருகிறது.

போராட்டங்களை ஒருங்கி ணைத்து வரும் அமைப்பொன் றின் நிர்வாகிகளில் ஒருவரான பிளான்கா எஸ்பானா மெசா, ‘‘தற்போதைய ஜனாதிபதி டினா போலுவார்ட்டே பொய்களைச் சொல்லி வருகிறார். அப்படி அவர் பொய்களையே சொல்லும் வரை யில் சமாதானத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன் றைக்கு இவ்வளவு மக்கள் வந்தி ருக்கிறார்கள் என்றால், அவர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்று அர்த்தம்’’ என்று குறிப் பிட்டுள்ளார்.  இரண்டு மாத கால போராட் டங்களை ஒடுக்க முனைந்த ஜனாதி பதி போலுவார்ட்டே, சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறி யிருக்கிறார். அரசின் அடக்கு முறை பெரும் அளவில் இருக் கும் நிலையில், பெருவைச் சேர்ந்த 46 வழக்கறிஞர்கள் சர்வ தேச குற்றவியல்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். டிசம்பர் 7, 2022 ஆம் தேதியன்று பதவி யேற்றதில் இருந்து 60க்கும் மேற் பட்டவர்கள் கொலை செய்யப் பட்டிருப்பதற்கு அவர் பொறுப் பேற்க வேண்டும் என்று பெரு ஜனாதிபதி டினா போலுவார்ட்டே மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவ ரோடு, பிரதமர் ஆல்பெர்ட்டோ ஓட்டாரோலா, ராணுவத்தளபதி மானுவல் கோம்ஸ், முன்னாள் அமைச்சர்கள் செர்வான்டெஸ் மற்றும் விக்டர் ரோஜாஸ் ஆகியோரையும் இணைத்துள் ளார்கள்.



 

;