world

img

நேபாளம் : ஆளும் கூட்டணி வெற்றி கம்யூனிஸ்ட் கட்சி(யு.எம்.எல்)யும் அள்ளியது

காத்மண்டு, மே 28- நேபாளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 2015 ஆம் ஆண்டில் புதிய அரசியல் சட்டத்தை நேபாளம் நிறைவேற்றியது. அதன் பிறகு இரண்டாவது முறையாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்துள்ளன. முதல் தேர்தல் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. 1 லட்சத்து 45 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்த னர். மே 13, 2022 அன்று நடந்த வாக்குப்பதிவில் 64 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் ஆளும் நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு மையம்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய சோசலிஸ்டு) மற்றும் ஜனதா சோசலிஸ்டுக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டன.

ளவு ஏற்பட்டதால் ஆட்சி கவிழ்ந்தது. பிரிந்து போனவர்களின் உதவியோடு, நேபாள காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. பிரசந்தா(புஷ்ப குமார் தஹல்) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு மையம்) மற்றும் மாதவ் குமார் நேபாள் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்டு) ஆகியவை ஒன்றுபட்ட கட்சியிலிருந்து பிரிந்து, ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ளன. உள்ளாட்சித் தேர் தல்களில் தொகுதி உடன்பாடு கண்டு போட்டி யிட்டன. ஆளும் கூட்டணி கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இதுவரையில் முடிவுகள் வெளிவந்துள்ளதில் நேபாள காங்கிரசைச் சேர்ந்த வேட்பாளர்கள் 13 ஆயிரத்து 711 பேரும், மாவோயிஸ்டு மையம் சார்பில் 5 ஆயிரத்து 44 பேரும், ஜனதா சோச லிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த  ஆயிரத்து 539 பேரும் ஆளும் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய சோசலிஸ்டு) கட்சியும் சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சரியாத யு.எம்.எல்

தனித்து விடப்பட்டாலும் நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஏராளமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கூட்டணியின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தக்கட்சி 11 ஆயிரத்து 847 இடங்களில் வெற்றி யைத் தழுவியுள்ளது. இரண்டு பிரிவுகள் கட்சியி லிருந்து வெளியேறி, நேபாள காங்கிரசோடு கைகோர்த்துக் கொண்டாலும் நிறைய இடங்க ளைக் கைப்பற்றியிருக்கிறது. முன்னாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட வில்லை என்பதையே இது காட்டுகிறது. இடதுசாரிகள்தான் பெரிய சக்தி என்பதும் இந்தத் தேர்தலில் தெரிய வந்திருக்கிறது. பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்டு மையம் வெளியேறாமல் இருந்தால், ஒன்றுபட்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான இடங்கள் கிடைத்திருக்கும். பொதுத் தேர்தல் நடைபெற்றால், ஆளும் நேபாள காங்கிரசுடனான தொகுதி உடன் பாட்டை மாவோயிஸ்டு மையம் மற்றும் ஐக்கிய சோசலிஸ்டு ஆகிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவு கள் தொடருமா என்பது தெளிவாகவில்லை.  தனியாகவே பொதுத் தேர்தலைச் சந்திக்க கே.பி.சர்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்டு-லெனி னிஸ்ட்) தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, பெரும் பான்மை கிடைக்காவிட்டால் ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தயார் என்றும் கட்சியின் தலைவர்களில் சிலர் வெளிப்படை யாகவே பேசி வருகிறார்கள். ஆளும் கூட்டணி மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி யோடு காணப்படுகின்றன.

 

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரஷ்யா மீது சுமத்தப்பட்ட தடைகள் கடும் விளைவுகளை உருவாக்கும் என்று இத்தாலியின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவரும், ஐரோப்பிய யூனியனின் தலைவருமான ரோமனோ புரோடி  தெரிவித்துள்ளார். அதிதீவிர வலதுசாரியான இவர், கடந்த 20 ஆண்டுகளாக எரிசக்தித்துறையில் ரஷ்யாவை நம்பியே இத்தாலி இருந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தாலியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளையுமே பாதிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

தப்புக் கணக்கு போட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வலதுசாரி அமைப்புகள் ஆக்கிரமிக்கப்பட்ட சில நகரங்களில் பேரணி நடத்துவதை சுட்டிக்காட்டியே இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். அதோடு, ஆக்கிரமிப்பாளர்களின் திட்டங்களை உடைத்து நொறுக்க வாருங்கள் என்று பாலஸ்தீன மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். அல் அக்சா மசூதியைப் பாதுகாக்க பாலஸ்தீன மக்கள் செய்த தியாகங்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் அளித்த கோரிக்கையை தலிபான் நிராகரித்துள்ளது. தலிபானின் ஆட்சி ஏற்பட்டதில் இருந்து பெண் குழந்தைகளின் கல்வி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எல்லையில் உள்ள அகதிகள் முகாம்களில் குடியேறி, ஈரானின் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தடைகளை நீக்க தலிபான் மறுத்துள்ளது.
 

;