வாஷிங்டன், ஏப்.23- அமெரிக்காவின் மிச்சிகன் மாகா ணத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மிச்சிகன் மாகாணத்தின் காவல் துறையினரால் 26 வயது பேட்ரிக் லோயா என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது இறுதிப் பயணத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் பங்கேற்றனர். அதில் கலந்து கொண்ட அமெரிக்க உரிமைகள் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அல் ஷார்ப்டன், “கொலை செய்யப் பட்டவர் யார் என்று உலகம் முழுக்க அறிவிக்கிறீர்கள். ஆனால் கொலை செய்தவரின் பெயர் ஏன் மறைக்கப்படு கிறது” என்று கேள்வி எழுப்பியிருக்கி றார். அமெரிக்காவின் இனரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. அத்தகைய தாக்குதல்க ளுக்கு காவல்துறையினரிடமிருந்து ஆதரவு கிடைப்பதோடு, காவல்துறை யினரே நேரடியாகத் தாக்குதல்களில் இறங்கி விடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் ஒரு காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டார். பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டாலும், தாக்குதல்கள் நிற்கவில்லை. விசார ணைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் வலுவாக எழுந்து நின்றது.
தற்போது பேட்ரிக் லோயா சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். காவல் துறையினரே வெளியிட்ட நான்கு வீடியோக்களில், லோயா தலையில் சுடப் பட்டிருக்கிறார். சூடு நடத்துகையில் லோயாவின் மீது அந்தக் காவல்துறை அதிகாரி ஏறி அமர்ந்திருக்கிறார். இக் காட்சிகள் பேட்ரிக் லோயா சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்து கின்றன. மிகவும் உறுதியான ஆதா ரம் இருந்தாலும், சுட்டுக் கொலை செய்த காவல்துறை அதிகாரியின் பெயரை வெளியிட நிர்வாகமும், காவல்துறையும் மறுத்து வருகின்றன. இந்த ஆதாரங்கள் மக்களின் எதிர்ப்பை அதிகமாக சம்பாதித்துள்ளன. மேலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படு கின்றன. தலையின் பின்புறம் சுடப்பட்டி ருப்பது கொலை செய்வதுதான் நோக்கம் என்பதைக் காட்டுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக் கிறார்கள். நிறவெறிக் கொலைக ளுக்கு எதிராகக் கடும் கண்டனம் எழுந்து வந்த சூழலில் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. கண்டனப் பேரணிகளில் பங்கு பெற் றோர், ‘‘இந்த எதிர்ப்பலைகள் இன் றோடு நிறைவு பெற்றுவிடக்கூடாது. நீதிக்கான நமது போராட்டம் தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது’’ என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்கள்.
வேலை நீக்கம்
பேரணியில் லோயாவின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். தங்கள் மகனுக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுப்பவர்களுக்கு நன்றி தெரி வித்துள்ளதோடு, அவர்கள் உடன் கைகோர்த்து நிற்போம் என்றும் கூறியி ருக்கிறார்கள். சுட்டுக் கொலை செய்த காவல்துறை அதிகாரியைப் பதவி நீக்கம் செய்து, அவர் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள் ளனர்.