world

img

போராட்டம் குணம் உடையவர்

37 வயதாகும் ஜோ வில்பிரைட் சோங்கா டென்னிஸ் உலகில் போராட்டம் குணமுடைய நபர்களில் இவரும் ஒருவர். ஸ்பெயின் வீரர் நடாலை போன்று ஒவ்வொரு புள்ளிகளிலும் கவனமாக விளையாடுவார்  என்பதால் அவருடன் மோதும் வீரர்கள் சற்று பயத்துடன் தான் மோதுவார்கள். சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால் தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், தோல்வி அடையும் நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு ஆட்டத்தையும் டை - பிரேக்கர் வரை இழுத்துக்கொண்டு செல்வார். தான் விளையாடிய கடைசி சர்வதேச போட்டியான பிரெஞ்சு ஓபன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் 3:49 மணிநேரம் கடினமாக போராடி நார்வே வீரரிடம் வீழ்ந்தார். சோங்கா எப்பொழுதும் சிரித்த முகத்துடனே விளையாடுவார். பெரும்பாலும் அதிகமாக கோபப்பட மாட்டார். கோபப்பட்டாலும் மைதானத்தில் வெளிப்படுத்தமாட்டார். ஷாட்களில் ஆக்ரோஷ பதிலடி கொடுப்பார். நடுவர்களிடம் அதிகமாக மோதுவார். பருமனான உடலை பெற்றிந்தாலும் மைதானத்தில் வேகமாக ஓடி பந்தை திசை திருப்பும் திறன் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;