world

img

தென்னாப்பிரிக்க குளோவர் பால்பண்ணை போராட்டம்!

நிறவெறிக் கொடுமையிலிருந்து 1994 இல் தென்னாபிரிக்கா விடுதலை பெற்றது. ஆனாலும் விவசாயத்துறையில் நிறவெறி நீடிக்கி றது. வெள்ளையின முதலாளித்துவ விவசாயி கள் மிகவும் எந்திர மயமாக்கப்பட்ட விவ சாய உற்பத்தி முறையை கையாண்டு வரு கிறார்கள். சராசரி வாழ்நிலையில் கருப்பு இன சிறு விவசாயிகள் ஏராளமாக உள்ளனர். கால் நடை வளர்ப்பிலும் கருப்பின மக்கள் ஈடு பட்டுள்ளனர். குளோவர் என்ற பால்பண்ணை யில் 5000 தொழிலாளர் வேலை செய்கின்றனர். நவம்பர் 22 முதல் இவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.  நவீன முதலாளித்துவம் கையாளும் உழைப்பு சுரண்டல் உத்திகள் இங்கே வெளிச் சத்திற்கு வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் மிகவும் பழமையான ,மிகப்பெரிய பால் பண்ணை கம்பெனி குளோவர். 2019இல் இஸ்ரேலின் சென்ட்ரல் பாட்டிலிங் கம்பெ னிக்கு(சிபிசி) குளோவர் கைமாறியது. அப் போதே குளோவர் பால்பண்ணை தொழிற் சங்கங்கள் இதை எதிர்த்தன.

 தென்னாப்பிரிக்காவின் ஜெனரல் இண்டஸ்ட்ரீஸ் ஒர்க்கர்ஸ் யூனியன், புட் அண்ட் அலைட் ஒர்க்கர்ஸ் யூனியன் எதிர்த்தன. சிபிசி என்ற கம்பெனி இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ளது. நிறவெறிக்கு எதிராக நீண்ட காலம் போராடிய பெருமை மிகு வரலாறு கொண்ட தென் ஆப்பிரிக்காவின் குளோவர் பால்பண்ணை இஸ்ரேலின் சிபிசி யுடன் இணைந்தது பொருத்தமில்லை. தென் னாப்பிரிக்க டிரிப்யூனலில் சங்கங்கள் முறை யிட்டபோது இது தங்கள் அதிகார வரம்பிற்குள் இல்லை என கைவிரித்து விட்டது. 2019 இல் கையெழுத்தான ஒரு ஒப்பந்தத்தில், கம்பெனி யில் 2022 வரை சீர்திருத்த நடவடிக்கைகள் இருக்காது என உள்ளது. கம்பெனி ஆட்குறைப்பு செய்ய நேரிட்டாலும் கூடுதல் நியமனங்கள் செய்வோம் எனக் கூறியது.  ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் 1600 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். பலர் வி.ஆர.எஸ் -சில் வெளியேறினர் .20 சதவிகிதம் ஊதியம் குறைக்கப்பட்டது.12 மணி நேர வேலை திணிக்கப்பட்டது.

பணி நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.நூற்றுக்க ணக்கான கிலோமீட்டர். தொலைவில் உள்ள கடற்கரை சார்ந்த நகரங்களுக்கு பலரும் மாற்றப்பட்டதால், விஆர்எஸ்-சில் வெளியேறி னர். பால் பண்ணை உற்பத்திப் பொருட்களை சில்லறை விற்பனை குடவுன்களுக்கு சப்ளை செய்யும் குளோவர் வேனில் ஒரு டிரைவரும் 2 உதவியாளர்களும் இருந்தனர். சரக்குகளை இறக்கி வைக்கும் வேலையை உதவியாளர் செய்து வந்தனர்.  தற்போது ஒரு உதவியாளரை நீக்கிவிட்டு டிரைவரும் சரக்கு இறக்கும் பணியில் உதவ வேண்டும் என்ற பணி நிலைமை மாற்றம். பல பன்னாட்டு கம்பெனிகளை போலவே சிபிசி கம்பெனியும் சிக்கன சீரமைப்பு நடவடிக்கை களை சட்டவிரோதமாக மேற்கொண்டு வரு கிறது. தொழிற்சங்கம் வலுவாக கருதுவது என்னவென்றால் சிபிசி கம்பெனியின் நோக்கம் தென்னாப்பிரிக்க கம்பெனியை மூடி விட்டு, இஸ்ரேலின் சரக்குகளை கொண்டு வந்து விற்பனை செய்வதாகும். அரசு தொழிற்சங்கம் எழுப்பிய கோரிக்கைகளை நிராகரித்துள்ளது .

கம்பெனி தேசவுடமையாக்கப்பட வேண்டும் என சங்கம் கோரியது.  ஜனவரி 8-ல் தென்னாப்பிரிக்க தொழிற்சங்கங் களும் பாலஸ்தீனிய ஆதரவு குழுக்களின் செயல் வீரர்களும் இணைந்த கூட்டம் நடைபெறு கிறது. உலக அளவில் எவ்வாறு இந்தப் போராட்டத்தை விஸ்தரிப்பது என கூட்டம் விவா திக்கும். ( Boycott, Divestment, and Sanctions movement) என்ற தொழிலாளர் விரோத கம்பெனிகளின் உற்பத்தி சரக்குகளை புறக்க ணிக்கும் இயக்கமும் கூட்டத்தில் பங்கேற்கி றது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இஸ்ரேல் ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தங் களை மட்டும் மேற்கொள்ளவில்லை. நாடுகளின் விவசாய துறையையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறது. எனவே பாலஸ்தீனிய ஆதரவு குழுக்களுடன் இணைந்துபேக்டரியிலும், தெருக்களிலும் போராட்டம் நடைபெறுகிறது.

;