world

img

வெனிசுலாவை ஏகாதிபத்தியம் மிரட்டுகிறது

காரகஸ், செப்.27- வெனிசுலாவையும், அந்நாட்டின் மக்க ளையும் ஏகாதிபத்திய அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது என்று வெனிசுலாவின் ஜனாதி பதி நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். வெனிசுலா அரசுக்குச் சொந்தமான வானொலி யில் மக்களிடம் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர்,  “நமது நாட்டை ஏகாதிபத்தியம் தொடர்ந்து மிரட்டுகிறது. வழக்கம் போலவே அகங்காரத்துடன் நடந்து கொள்கிறார்கள். அதே  அகங்காரத்துடன் வெனிசுலாவைச் சுரண்டு கிறார்கள். வெனிசுலாவையும், மக்களை யும் தங்களுக்குச் சாதகமான கருத்துடையவர் களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்” என்றார். இந்த ஏகாதிபத்திய சட்டவிரோத, சதிவேலை களுக்கு எதிராகத் திரளுங்கள் என்று மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்த அவர், “இவர்களின் அனைத்து மிரட்டல்களை மீறி, 2022 ஆம்  ஆண்டு என்பது வெனிசுலாவிற்கு வளர்ச்சி  அடையும் நாடாகவே இருக்கிறது. இந்த ஆண்டை பொருளாதார வளர்ச்சி, பொருளா தார விரிவாக்கம், சமூக மீட்சி மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தலைசிறந்த அரசியல் சக்தியாக இருத்தல் ஆகியவற்றை  மேலும்  பலப்படுத்த வேண்டும் என்று  அனைத்து  வெனிசுலா மக்களையும் கேட்டுக்கொள் கிறேன்” என்று குறிப்பிட்டார்.

குடியேற்றம் குறித்த விவகாரத்தில் மெக்சி கோவின் எதிர்க்கட்சிகளோடு பேசாவிட்டால், பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டியிருந்தார். அமெரிக்காவின் தடைகளால் கொடூரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வெனி சுலாவை மேலும் மிரட்டும் வேலையைச் செய்ய  வேண்டாம் என்று கண்டனம் தெரிவித்துள்ள மதுரோ, வெனிசுலாவில் அமெரிக்க ஆத ரவுடன் வலதுசாரிகள் செய்த சீர்குலைவு வேலை களால் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில்  வெளியேறிய வெனிசுலா மக்களில் பெரும்பா லானோர் நாட்டுக்குத் திரும்பி விட்டார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பணிய வேண்டாம்

ஏகாதிபத்தியத்தின் மிரட்டல்களுக்குப் பணிந்து விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையை நிகரகுவா கேட்டுக் கொண்டுள்ளது. ஐ.நா.வின் 77ஆவது பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிகரகுவாவின் வெளியுற வுத்துறை அமைச்சர் டெனிஸ் மோன்கடா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், “உறுப்பு நாடுகளின் இறையாண்மை யை பன்னாட்டு அமைப்புகள் மதிக்க வேண்டும். ஆதிக்க சக்திகளின் நலன்களைப் பாது காப்பதில் இருந்து விலகி நின்று, சுதந்திரமாக இயங்க வேண்டும்” என்றார். ஏகாதிபத்தியத்தின் பேராசைக்கு எதிராக கவுரவமான, இறையாண்மை கொண்ட, விடு தலை பெற்ற மக்களின் குரலை ஒலிப்பதற்காக இங்கு வந்துள்ளோம் என்று பெருமையுடன் குறிப்பிட்ட மோன்கடா, “பல நூற்றாண்டுகளாக குடியேற்ற நாடுகளாக இருந்த பகுதிகள் தற்போது அதிலிருந்து விடுபட்டு கவுரவமான தேசங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை மாற்ற முயலும் ஏகாதிபத்திய சக்திக ளின் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பாக ஐ.நா. சபை போன்றவை மாறிவிடக்கூடாது” என்று தெரிவித்தார். கியூபா, வெனிசுலா, பாலஸ்தீனம், ஈரான்  மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் நடந்து  வரும் மக்களின் நியாயமான போராட்டங் களுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று நிகர குவா மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்வ தாகவும் மோன்கடா குறிப்பிட்டார்.
 

;