world

img

எண்ணெய் வளத்திலும் முதலிடம்?

டெஹ்ரான், டிச.10- ஈரானின் தென்மேற்குப் பகுதியில் புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு பெருமளவு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விரிவான அறிக்கையை வெளியிடுவோம் என்று கூறியுள்ள ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி, “எங்கள் பெட்ரோலியத்துறை வல்லுநர்கள் நீண்ட நெடிய ஆய்வை மேற் கொண்டனர். உயரத்தில் இருந்து பூமியில் 7ஆயிரம் மீட்டருக்குக் கீழே உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தைக் கண்டு பிடிக்கும் தொழில்நுட்பத்தை முதன்முறையாக செயல்படுத்தியிருக்கிறோம். முதன்முறை பயன் படுத்தும்போதே வெற்றியும் கிடைத்திருக்கி றது” என்றார். தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் மெஹ்டி ஃபகோர் கூறுகையில், “இந்த ஆய்வுக்கான ஆளில்லா விமானத்தை ஈரான் விஞ்ஞானிகளே சொந்தமாகத் தயாரித் துள்ளனர். புள்ளிவிபரங்களை சேகரிப்பதற் காக இந்த விமானம் தற்போது பயன்படுத்தப் படுகிறது. ஒட்டுமொத்த ஈரான் நிலப்பரப்பில் பத்து விழுக்காடு தற்போது ஆய்வுக்கு உட்ப டுத்தப்பட்டுள்ளது. உலகில் மிகச்சில நாடு கள்தான் இத்தகைய விமானத்தைப் பயன் படுத்தும் திறனைப் பெற்றுள்ளன. மிகக்குறை வான உயரத்தில், அதாவது 600 மீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது” என்றார்.

பாரசீக வளைகுடாப் பகுதிகளில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் தற்போதைய ஈரானின் வசம் ஏராளமான இயற்கை வளங்களைக் குவித்திருக்கிறது. ஈரானின் எண்ணெய் வளம்  தற்போதைய பாரசீக வளைகுடாவின் கடற் பகுதி மற்றும் ஜாக்ரோஸ் மலைத்தொடரின் அடிவாரங்களில்தான் கொட்டிக் கிடக்கிறது. பாரசீகத்தட்டும், மத்திய ஈரான்  பீடபூமியும் மோதி உருவான ஜாக்ரோஸ் மலைத்தொடர் ஈரானின் இயற்கை வளம் பொருந்திய பகுதி யாகக் கருதப்படுகிறது. பல்வேறு இன்னல்க ளுக்கு இடையில்தான் புதிய இயற்கை வளங்க ளைக் கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்படு கின்றன. ஜாக்ரோஸ் பள்ளத்தாக்குப் பகுதியானது 5 லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்ப ளவைக் கொண்டதாகும். துருக்கி, சிரியா, இராக்கின் குர்திஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இந்தப் பள்ளத்தாக்கு அமைந்துள் ளது. கிட்டத்தட்ட 12 ஆயிரம் மீட்டர் தடிமனைக் கொண்டதாக இப்பகுதியில் வண்டல் மண் இருக்கிறது. ஈரானின் ஹைட்ரோகார்பன் வயல்க ளில் 23 வயல்கள் குவைத், இராக், பஹ்ரைய்ன், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுட னான எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ளன.

நான்காவது இடம்

ஈரானின் வசம் சுமார் 16 ஆயிரம் கோடி பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலக எண்ணெய் வளத்தில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு ஈரானின் வசம் இருக்கிறது. வெனிசுலா, சவூதி அரே பியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் வரிசை யில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நான்கா வது நாடாக ஈரான் இடம் பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் ஈரானை முதலிடத்திற்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது. இயற்கை எரிவாயு இருப்பில் ஈரான் முதலிடத்தில் இருக்கிறது. உலக இருப்பில் 18 விழுக்காடு இயற்கை எரிவாயு ஈரான் வசம் உள்ளது. எண்ணெய் உற்பத்தியில் ஈரான் தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஈரானின் வயல்களில் இருந்து எடுக்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளா தார மற்றும் வர்த்தகத் தடைகளை மீறி தனது எண்ணெய் வர்த்தகத்தை ஈரான் அதிகரித்துள் ளது. உள்ளூர் வளங்களைத் திரட்டுவதில் ஈரான் கூடுதல் கவனம் செலுத்த இந்தப் பொருளா தாரத் தடைகள் உதவியுள்ளன என்று அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.