world

img

ஜனவரி -1 ஆண்டின் முதல் நாளாக ஆனது எப்படி?

ஜனவரி மாதத்தின் முதல்நாள் ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் இனம், மொழி, பண்பாடு சார்ந்து பல்வேறு புத்தாண்டுகள் இருந்தாலும் அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய புத்தாண்டாக ஜனவரி 1 விளங்குகிறது. 

இவ்வாறு கொண்டாடப்படுவது கடந்த 500 ஆண்டுகளாகத்தான் என்பது வியப்பாக இருக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள் மார்ச் 25ஆம் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாக கருதினர். அப்போது ஆண்டுக்கு பத்து மாதங்களே இருந்தன. சூரியனின் நகர்வினை கொண்டு ரோமானியர்கள் மார்ச் 1ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கொண்டனர். அவர்கள் தான் ஆண்டுக்கு 12 மாதங்கள் என்று சேர்த்தனர். ரோமானியர்களின் கடவுளான ஜனஸ் என்பதிலிருந்தே ஜனவரி வந்ததாக கூறப்படுகிறது. 

ரோமானிய மன்னரான ஜூலியஸ் சீசர்தான் ஜனவரி 1ஆம் தேதியை முதன்முதலாக ஆண்டின் முதல் நாள் என்று அறிவித்தார். இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு. 46ஆம் ஆண்டில் இவ்வாறு அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை ஜூலியன் காலண்டர் முறை என்று அழைக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னர்கள் இயேசு கிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 31 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாள் என்று அறிவித்து புத்தாண்டு கொண்டாடினர். கி.பி.1500 ஆம் ஆண்டு வரை ஆண்டின் முதல் தேதி குறித்து பல்வேறு குழப்பம் நிலவியது. 

கி.பி.1582ஆம் ஆண்டு போப் 13ஆம் கிரிகோரி ஜூலியன் காலண்டரை ரத்து செய்தார். 365 நாட்களை 12 மாதங்களாக வரையறை செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டுலீக் ஆண்டு என்றும், அந்தாண்டின் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் என்றும் அவரே உருவாக்கினார். அதன் பின்னர் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது. இப்போது அதுவே நடைமுறைக்கு உள்ளது.

;