வாஷிங்டன், ஜூன் 19- அமெரிக்க அரசாங்கம் கட்டாய ராணுவ சேவை சட்டத்தை கடந்த வாரம் ஜூன் 14 அன்று அமல்படுத்தியுள்ளது. இதன்படி 18 முதல் 26 வயதுடைய இளைஞர்கள் கட்டாயமாக ராணுவ சேவையில் தங்களை பதிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு வேளை இளைஞர்கள் கட்டாய ராணுவ சேவையில் தங்க ளை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருந்தால், இந்தச் சட்டத்தின்படி அவர்கள் மீது குற்றவியல் நட வடிக்கைகள் பாயும் என அமெ ரிக்க அரசு மிரட்டியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக 18 வயது கடந்த இளை ஞர்கள் தங்களின் எதிர்காலத்திற் கான வேலையை தாங்களே தேர்ந்தெடுக்கும் குறைந்தபட்ச உரிமையைக்கூட தற்போது இழந்துள்ளனர் என்று ஜோ பைடன் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. உலகளவில் பெரும் நெருக்க டியை உருவாக்கியுள்ள உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர்ப் பதற்றங்களை தணிய விடா மல் தொடர்ந்து அமெரிக்கா தூண்டி வருகிற சூழலில், அந்நாட் டிலேயே அமல்படுத்தியுள்ள கட்டாய ராணுவச் சட்டங்கள் பல சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் தெரி வித்துள்ளனர். மேலும் அவர்கள் அமெ ரிக்கா முதன்முதலாக 1917 முதல் உலகப்போரின் போது தான் கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தை கொண்டு வந்தது. பின் அதனை 1920 இல் கைவிட்டு விட்டது. மீண்டும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1940 ஆம் ஆண்டு இச்சட்டத்தை அமல் படுத்தியது. இந்த போர் முடிவுக்கு பிறகு 1948 இல் இச்சட்டத்தை அமெ ரிக்கா மறுசீரமைப்பு செய்தது. இதன் பிறகு 1975 ஆம் ஆண்டு கட்டாய ராணுவ சேவையை சுய விருப்ப அடிப்படையிலான சேவை என மாற்றியது. அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு ஆப்கா னிஸ்தானில் நஜிபுல்லா தலை மையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்க்கப்படும் அபாயத்தை தடுக்க சோவியத் யூனியன் ஆப்கா னிஸ்தானில் நுழைந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், மீண்டும் கட்டாய ராணுவ சேவையை நடைமுறைப் படுத்தினார். அப்போது கட்டாய ராணுவ சேவையை யாரேனும் மேற் கொள்ளவில்லை என்றால் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் 25,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடாத இளைஞர்களுக்கு அரசு வேலைக ளில் சேர்வதற்கு, மாணவர் கல்விக் கடன் பெறுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள கட்டாய ராணுவ சட்டத்தை அமெரிக்காவின் நாடா ளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இன்றி நிறைவேற்றப் பட்டுள்ளது. தற்போது இந்தச் சட்டங்களை அமல்படுத்த அமெ ரிக்க ராணுவத்திற்கு 89,500 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.