ஹனோய், ஜூலை 19 – வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் ஜூலை 19 அன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 80-ஆவது வயதில் அவர் காலமானார். 1944-ஆம் ஆண்டு ஹனோயில் பிறந்த ட்ராங் தத்துவத் துறையில் பட்டம் பெற்ற நுயென் பு ட்ரோங், தனது 22 வயதில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பின ராகி மார்க்சிய - லெனினிச கோட்பாட்டில் உறு தியாக நின்று, கட்சியை கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். நுயென் பு ட்ரோங் மறைவைத் தொட ர்ந்து, நாட்டின் ஜனாதிபதி டூ லாம் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.