world

img

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த துரித உணவகம் கண்டுபிடிப்பு

இத்தாலியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த துரித உணவகம் கண்டறியப்பட்டுள்ளது. 
வெசுவிஸ் சிகரத்தில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தின் காரணமாக வெளியான எரிமலை குழம்பில் சிக்கி கிபி.79ம் ஆண்டில் இத்தாலியின் பொம்பேயி நகரம் அழிந்து போனது. இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பானங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஒரு துரித உணவகம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மிகப்பெரிய குடுவைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து சுடு மண்ணால் கட்டமைக்கப்பட்டு அதில் பானங்களும், உணவுப்பொருட்களும் நிரப்பப்பட்டு அந்த கடையின் வெளிப்பகுதியில் மக்கள் அமர்ந்து அல்லது நின்றவாறு உண்ணும் நடைமுறை இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இது சுடச்சுட உணவுப்பொருட்களை வழங்கும் உணவக கட்டமைப்புகள் தெர்மோபோலியா என அழைக்கப்பட்டுள்ளது.  இதுபோல் பொம்பேயி நகரத்தில் சுமார் 80 தெர்மோபோலியா கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் வண்ண ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கு பன்றி கோழி, இறைச்சிகளும் விற்பனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக  ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை இயக்குநர் மருத்துவர் மஸ்ஸிம்மோ ஒஸன்னா தெரிவித்துள்ளார்.
 

;