world

img

தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு....

லண்டன்:
தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 36 இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.விவசாயிகளுக்கு விரோதமான மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து ெய்யக்கோரி தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தபோராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள் ளனர். அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராபிக்கு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில், தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்களுக்கும், பஞ்சாபிகளுக்கும் கவலை அளிக்கிறது. எனவே இதுகுறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அமெ.வில் ஆதரவு போராட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடத்துகின்றனர். சான் பிரான்ஸிஸ்கோ - ஆக்லாந்து போ பாலத்தின் மீது கற்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்களின் மேல் கதவை திறந்து நின்று கொடிகள், பதாகைகளை காட்டி அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;