world

img

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு  

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.  

இந்தியாவுடன் குறுகிய எல்லைப்பகுதியை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் மசூதியில் வழிபாட்டாளர்கள் மீது கைக்குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து குண்டுவெடிப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது.  

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் புல்-இ-கிஸ்தி மசூதியில் இன்று மதியம், பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திலேயே அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர்.  

இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் இதுவரை உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதேபோல், ஏப்ரல் 3 அன்றுஆப்கானிஸ்தான் தலைநகரின் மையத்தில் நடந்த வெடிகுண்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 59 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திலும் குண்டுவெடிப்புக்கு மக்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டதே காரணம் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

;