செயற்கை நுண்ணறிவை காட்டி தொழிலாளர்கள் பணி நீக்கம்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றான பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவன செலவுகளைக் குறைக்கின்றோம் என்ற பெயரில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அதற்கான வேலைகளையும் துரிதப்படுத்தி வருகிறது. அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் பல பணிகளை நிர்வகிப்பதால் இவ்வாறு பணிநீக்கம் செய்கிறது. கடந்த ஜனவரி மதமே 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மளிகைச் சாமான் விலை உயர்வு: மன அழுத்தத்தில் அமெரிக்கர்கள்
மளிகைச் சாமான்களின் விலை உயர்வு தங்கள் மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளதாக அமெரிக்க மக்கள் கருதுகின்றனர். அசோசியேட் பிரஸ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி பிற பணக்கஷ்டங்களை விட மளிகைச் சாமான்களின் விலை உயர்வால் அதிக மனஅழுத்தம் ஏற்படுவதாக 53 சதவீதத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர குறைவான ஊதியம், வீட்டுச் செலவு, கிரெடிட் கார்டு கடன், மருத்துவப் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதாலும் மன அழுத்தத்தில் உள்ளனர்.
இந்தியா - இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
இந்தியா-இலங்கை இடையே ஒத்துழை ப்பை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள ப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இலங்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவ்வொப்ப ந்தங்கள் இலங்கை அரசமைப்பு மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் உள்ளது. ஒப்பந்தங் களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த தேசியவாத அமைப்புகள் 2 மனுக்களை தாக்கல் செய்த நிலை யில் மனுக்களை ஏற்க எவ்வித முகாந்திரமும் இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வற்புறுத்தலும் அழுத்தமும் எதையும் சாதிக்காது – சீனா
வற்புறுத்தல் மற்றும் அழுத்தம் எதையுமே சாதிக்காது. சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும் என சீனா தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மிரட்டிய நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் தேசிய நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் சீனா தன்னுடைய எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூளையின் சிந்தனையை குறைக்கும்
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வேலை செய்பவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறையும் என புதிய ஆய்வ றிக்கை தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ண றிவை மட்டுமே நம்பி அதனை அதிகமாக பயன் படுத்தக் கூடாது. அதனை நமது பணிகளை மெருகூட்டும் வகையில் பயன்படுத்துவதே சரியானது என பல ஆராய்ச்சிகள் கூறி வரு கின்றன. இந்நிலையில் மாசாசூட்ஸ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் செயற்கை நுண்ண றிவை மட்டுமே பயன்படுத்தும் நபர்களின் சிந்தனைத் திறன் 47 சதவீதம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வெள்ளம் : 141 குழந்தைகள் உள்பட 302 பேர் பரிதாப பலி
இஸ்லாமாபாத்,ஆக. 5 - பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கன மழை வெள்ளத்தால் இதுவரை 141 குழந்தைகள் உள்பட சுமார் 302 பேர் பரிதாபமாக பலியாகி யுள்ளனர். மேலும் 727 பேர் படுகாயமடைந்து ள்ளனர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக பருவமழை இடைவிடாமல் பொழிந்து வருகின்றது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததால் பலரும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மக்கள் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களுடைய குடும்பத்தின் அடிப்படை பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி, பணவீக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளான பாகிஸ்தானிய மக்கள், இந்த பாதிப்பின் காரணமாக மேலும் மோசமான வறுமை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு ஆணை யத்தின் கணக்கீட்டின்படி 1,678 வீடுகள் இடிந்துள்ளன. 428 கால்நடைகள் உயிரி ழந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் (ஆக.4) பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட இருவர் வீடு இடிந்து விழுந்ததில் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கையும் படுகாயமடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 முதல் 10 வரை பாகிஸ்தானின் மையப்பகுதியில் உள்ள மாகாணங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் ஜீலம், செனாப், ஹன்சா, ஷிகார் உள்ளிட்ட முக்கிய ஆறுகள் மட்டுமின்றி அதனு டைய கிளை ஆறுகளிலும் அதிகமான வெள்ளம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.