அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.அப்போது வெனிசுலாவுடனான உறவை அனைத்துச் சூழலிலும் மேம்படுத்துவோம் என சீனா அறிவித்தது. பெல்ட் மற்றும் ரோடு திட்டம் , பொருளாதாரம், வர்த்த கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பதற்கான ஆவணங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். வெனிசுலாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்யும் சீனாவின் நீண்ட கால சர்வ தேச சந்திர ஆராய்ச்சி நிலைய (International Lunar Research station) திட்டத்தில் முதல் லத்தீன் அமெரிக்க நாடாக வெனிசுலா இணைந்துள்ளது. அனைத்துச் சூழ லிலும் மேம்பாடு அடைதல் என்ற சீனாவின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெனிசுலா 2,54,000 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக சிக்கலான அரசியல் நெருக்கடி யால் சுமார் 70 லட்சம் மக்கள் வெனிசுலாவை விட்டு வெளியேறியுள்ளனர். அந்நாட்டின் பொருளாதாரமே எண்ணெய் ஏற்றுமதியை நம்பியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் வெனிசுலா சீனாவுடனான உறவால் பல லட்சம் கோடி டாலர்கள் கடன்கள் மற்றும் முதலீடுகளை சீனாவிடம் பெற்றுள்ளது.