கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர், ஒற்றையர் பிரிவுகளில் புதனன்று முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், வியாழனன்று 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ளன. ஆடவர் ஒற்றையர் பிரிவுகளில் முன்னணி வீரர்கள் பெரியளவில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து வெளியேறாத நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் அரை டஜன் முன்னணி வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறியுள்ளனர்.
முதல் சுற்றில் வெளியேறிய வீராங்கனைகள்
1. கெர்ஜிசிகோவா (செக் குடியரசு)
2. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)
3. வெக்கிச் (குரோஷியா)
4. ஸ்டரைகோவா (செக் குடியரசு)
5. அனஸ்டாசியா (ரஷ்யா)
6. கார்சியா (பிரான்ஸ்)