தேர்தல் நடத்தவில்லையென்றால் ஆபத்து ஏற்படும் : யூனுஸ்
வங்கதேசத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தா விட்டால் “மிக ஆபத் தான விளைவுகள் ஏற்படும்” என அந்நா ட்டின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகம் தேர்தல் நடத்த முயற்சிகளை எடுக்கவில்லை. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 2026 பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
இந்தோனேசியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு கொடுக்கப்படும் அதிக சலுகைகளுக்கு எதிராக மாணவர் கள் நடத்திய போரா ட்டத்தில் போராட் டக்காரர் ஒருவரை காவலர்கள் கார் ஏற்றிப் படுகொலை செய்தனர்.இதனால் நாடு முழுவதும் பெரும் போராட் டங்கள் வெடித்து வன் முறையாக மாறிய நிலையில் 5-8 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்க உள்ளதாக அரசு கூறியுள்ளது.
மியான்மர் தேர்தலுக்கு இந்தியா உதவி
2025 டிசம்பர் மாதம் மியான்மரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை கண்காணித்து உதவ அதிகாரிகளின் குழுக்களை அனுப்ப உள்ளதாக இந்தியா தெரிவித்துள் ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமை ப்பின் உச்சிமாநாட் டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் உடனான சந்திப்புக்குப் பிறகு இது அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது எல்லையில் அமைதியை உறுதிப்படுத்துவது, வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசப் பட்டுள்ளது.
ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கும் ஜெலன்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வியாழக் கிழமையன்று (செப்-4) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. மூன் றரை ஆண்டுகளு க்கு மேலாக நடை பெற்று வரும் போரை நிறுத்த பல கட்டப் பேச்சுவார் த்தை நடைபெற்று வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளின் மூலமாக ஆயுதங்களை வாங்கி ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலை உக்ரைன் தீவிரப் படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பு நடை பெற உள்ளது.
பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகும் காசாவில் எதுவும் மாறவில்லை
காசாவில் பஞ்சம் உருவாகிவிட்டதை ஐ.நா. அவை முறையாக அறிவித்தபோதிலும் உணவு உள்ளிட்ட மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவி செய்வதில் எந்தவித முன்னேற் றமும் இல்லை என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகும் அங்குள்ள மக்கள் இன்னும் பட்டினியால் வாடி வருகின்றனர். 5 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ் தீனர்கள் கொடூரமான பட்டினியால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் காசாவில் பரவலாக பட்டினி மரணங்களும், வறுமையும், தீவிர ஊட்டச்சத்துக் குறை பாடும் நிலவி வருகிறது.