புதிய அமைச்சரவை தாய்லாந்து மன்னர் அறிவிப்பு
தாய்லாந்தின் முன்னாள் அமைச்சர் சூரியா ஜங்ருங் ரேங்கிட் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட் டுள்ளார். மேலும் புதிய அமைச்சரவை யும் பதவியேற்றது. கம்போடியாவின் முன் னாள் பிரதமரிடம் தாய்லாந்திற்கு எதி ரான கருத்துகளை அந்நாட்டு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தெரிவித்த உரையாடல் வெளியானதை தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத னைத்தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தை காலக்கெடுவிற்குள் முடியுமா?
தென் கொரியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடை யிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை டிரம்ப் விதித் துள்ள காலக்கெடுவுக்குள் முடியுமா என தெரிய வில்லை என அந் நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் கூறியுள் ளார். இரு நாடுக ளும் தங்கள் நிலைப் பாடுகளை தெளிவு படுத்தி ஒப்பந்தத் தை இறுதிப்படுத்த இன்னும் முயற்சி செய்து வருவதாக வும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வட கொரியாவுடனான மோசமடைந்துள்ள உறவுகளை மேம்படுத்துவதற்கான தனது எண்ணத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ தொடர்ந்து தீவிரமடைகிறது
கிரீஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள கிரீட்டின் ஐராபெட்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ இரவு முழு வதும் வீசிய பலத்த காற்றால் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில்உள்ள ஹோட்டல்கள் மற் றும் வீடுகளிலிருந்து 1,500 க்கும்மேற்பட்ட மக்களை படகு வழியாக பாதுகாப் பாக வெளியேற்றி யுள்ளது அரசு. தீயை அணைக்க 10 விமா னங்கள் 230 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.ஆயினும் காற்றின் வேகத்தால் தீயை உடனடி யாக கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பின்பற்றுமா?
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே நடந்து வரும் போரை 60 நாட்களுக்கு இடை நிறுத்த டிரம்ப் முன்வைத்த முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள் ளதாக தெரிவித்துள் ளார். எனினும் அந்த முடிவை ஏற்று இஸ் ரேல் போர் நிறுத்தத் தைப் பின்பற்றுமா என கேள்வி எழுந் துள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக ஹமாஸ் அமைப்புடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏமனுக்கு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும்
ஏமனில் நீடித்து வரும் மோதலுக்கு “நியாயமான அரசியல் தீர்வு” காணப்பட வேண்டும் என ஏம னுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க் அழைப்பு விடுத்துள் ளார். ஏமன் பிரதமர் சலீம் பின் புரைக்கைச் சந்தித்து, சிவில் சமூக உறுப்பினர்கள் மற் றும் அரசியல் கட்சி கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண் தலை வர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதன்பிறகு கொ டுத்த பேட்டியில் ‘போர் இல்லை அமைதி இல்லை’ என்ற நிலையிலிருந்து நீண்டகால தீர்வை நோக்கி ஏமனை நகர்த் தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என தெரிவித்தார்.