world

img

கலிபோர்னியாவில் காந்தி நினைவு நாளில் சிலை சேதம்

அமெரிக்காவில் காந்தி நினைவு நாளில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள டாவிஸ் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் பூங்காவில் 6 அடி உயரமும் 294 கிலோ எடையும் கூடிய வெண்கல காந்தி சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்காலில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளனர். காந்தி நினைவு நாளான இன்று காந்தி சிலை சேதமடைந்து காணப்பட்டதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கலிபோர்னியா மாகாண காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;