இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை
ஹமாஸ்-இஸ்ரேல் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தையின் முதல் அமர்வு கத்தாரில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இஸ்ரேல் தரப்பு அதிகாரிகளுக்கு முடிவுகளை ஏற்கவும், உடன்பாட்டை எட்டுவதற்கும் போதுமான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்த பிறகே போர் நிறுத்தம் குறித்த முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது.
4.5 லட்சம் ஆப்கானியர்கள் ஈரானில் இருந்து வெளியேற்றம்
ஜூன் மாதம் துவக்கம் முதல் ஈரானில் இருந்து சுமார் 4,50,000 ஆப்கானி யர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா அவையின் இடம்பெயர்வு அமைப்பு தெரி வித்துள்ளது. போதிய ஆவணங்கள் இல்லாத ஆப்கானியர்கள் ஜூலை 6 க்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2025 முதல் 6 மாத காலத்தில் மட்டும் மொத்தம் 9,06,326 ஆப்கானியர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.
போர் தீர்வு அல்ல: போப் லியோ வலியுறுத்தல்
போர் தீர்வு அல்ல. சட்டரீதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை உரு வாக்க உரையாடலும் சகோதரத்துவமும் வளர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல சகோதர சகோதரிகள் துன்பத்தில் உள்ள போது நாம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அமைதி என்பது நாம் தைரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் வளர்க்க வேண்டிய ஒரு பரிசு என கூறியுள்ள அவர், அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித் துள்ளார்.
23 லட்சம் கொடுத்தால் கோல்டன் விசா
23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வரை கோல்டன் விசா திட்டத்தை பெறுவதற்கு அந்நாட்டில் கட்டாயமாக குறைந்தபட்சம் ரூ.4.66 கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்து வாங்க வேண்டும். அல்லது முதலீடு செய்ய வேண்டும். இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் வங்கதேசத் திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதத்தில் சுமார் 5000 இந்தியர்கள் கோல்டன் விசாவிற்கு விண் ணப்பிப்பார்கள் என கூறப்படுகிறது.
எலான் மஸ்க் கட்சிக்கு டிரம்ப் எதிர்ப்பு
எலான் மஸ்க் துவங்கியுள்ள புதிய கட்சிக்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். மஸ்க் குழப்பத்தை உருவாக்கவே புதிய கட்சியை துவங்கியுள்ளார். அமெரிக்காவில் 2 கட்சிகள் முறையே கைகொடுக்கும் 3 ஆவது கட்சி மக்களிடம் எடுபடாது எனவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப்பின் புதிய வரிச் சலுகை மசோதாவுக்கு எதிர்த்து தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே மோதல் உருவானது. இந்நிலையில் டிரம்ப்பை விட்டு விலகிய எலான் மஸ்க், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்.
அமெரிக்காவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 80-ஐ கடந்தது
டெக்சாஸ், ஜூலை 7- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகா ணத்தின் கெர் கவுண்டி என்ற பகுதியில் ஜூலை 4 அன்று ஏற்பட்ட பெரும் மழை வெள் ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. மலைகள் நிறைந்த அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கெர் கவுண்டி பகுதி கோடைகால முகாம்கள் அமைக்கும் பிரபலமான இடமாக இருந்து வருகிறது. கோடைக்காலத்தில் இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் முகாம் அமைத்து பொழுதுபோக்கில் ஈடுபடுவார்கள். அவ்வாறு முகாம் அமைத்திருந்தவர்கள் கனமழையால் அப்பகுதியில் இருந்த ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் மட்டும் 28 பள்ளிக்குழந்தைகள் உட்பட 68 நபர்க ளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அம் மாகாணம் முழுவதும் 82 நபர்கள் பலியாகி யுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் 41 பேர் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள் ளது. எனினும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிக ரிக்கும் என மாகாண அதிகாரிகள் எச்ச ரித்துள்ளனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால முகாமில் இருந்த பத்து மாண விகள் மற்றும் அம்முகாமின் ஆலோசகர் ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையையும் மீட்புப்பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த பேர ழிவு 100 ஆண்டுகளில் ஏற்படாத ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்த பகுதிகளை அவர் வெள்ளியன்று பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.