world

img

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு - 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வாஷிங்டன், டிச.23- அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் இன்று ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாள் மட்டும் 2,270 விமானங்கள் ரத்தாகியுள்ளன.

தொடர்ந்து அதிகளவில் பனி பொழிந்து வருவதால், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. இதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.