world

img

மெக்சிகோ : இடதுசாரிகள் வெற்றி தொடர்கிறது

மெக்சிகோ சிட்டி, ஜூன் 7- மெக்சிகோ நாட்டின் மிகப்பெரிய மாகாண மான மெக்சிகோ மாகாணத்தில் ஆளும் இடது சாரிக் கட்சியான மொரேனா முதன்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டி ஆகும். இந்த நகரத்தை மூன்று பக்கம் சூழ்ந் துள்ளதாக மெக்சிகோ மாகாணம் அமைந்திருக் கிறது. இந்த மாகாணத்தில் கடந்த எழுபது ஆண்டு களாக வலதுசாரிக் கட்சியான அமைப்புசார் புரட்சி கரக் கட்சிதான் அதிகாரத்தில் இருந்து வந்தது. மெக்சிகோ நாட்டின் எந்தப்பகுதியில் ஆட்சி மாறி னாலும் இந்த மாகாணத்தில் அவர்களின் ஆட்சி  தொடரும் நிலையே இருந்து வந்தது. அண்மையில் நடைபெற்ற தேர்தலிலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றி பெற்று விடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், மக்கள் அவர் களைத் தோற்கடித்துள்ளனர். மெக்சிகோவில் அம்லோ என்று அழைக்கப் படும் ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து இடதுசாரிக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் சொத்துக்கள்  அந்நிய சக்திகளின் பிடியில் இருந்து மீட்கப் பட்டுள்ளன. இவர் பொறுப்பிற்கு வரும்வரையில் பல ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலில் 71 ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தில் இருந்த மெக்சிகோ மாகாணத்தை வலதுசாரி யினர் இழந்துள்ளார்கள்.

இடதுசாரிகளின் ஆதரவோடு மொரேனா கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய டெல்ஃ பினா கோமஸ் 52.7 விழுக்காடு வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றிருக்கிறார். வலதுசாரிகள் சார்பில் போட்டியிட்ட அலஜென்ட்ரோ டெல் மோரல் 44.3  விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். தொடர் தோல்விகளைத் தழுவி வந்தாலும், மெக்சிகோ மாகாணத்தில் கிடைத்துள்ள தோல்வி, வலது சாரிகள் இதுவரையில் அடையாத தோல்வியாகக் கருதப்படுகிறது. மெக்சிகோ நாட்டிலேயே இந்த  மெக்சிகோ மாகாணம்தான் அதிக மக்கள் தொகை யைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது வெற்றிக்குப் பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த கோமஸ், “ஒரு வித்தியாசமான ஆட்சி யை மக்கள் பார்ப்பார்கள். காணாமல் போனவர் களின் தாய்களுக்கு நான் உறுதிமொழி அளிக் கிறேன். அவர்களோடு நான் உறுதியாக நிற்பேன்.  அவர்களைக் கண்டுபிடிப்பது அல்லது அவர் களின் நிலை என்னவானது என்பதை ஆய்வு செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்வேன். பெண்கள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கடுமை யாகப் போராடுவேன்” என்றார். இந்த மாகாணத் தில் ஒரு பெண் ஆளுநராக மக்களால் தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். 

எதிர்க்கட்சிக்கும் வெற்றி

மக்கள் தொகை பெருமளவில் இல்லாத, நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கோஹுய்லா மாகாணத்தில் வலதுசாரிக் கட்சி யான அமைப்புசார் புரட்சிகரக்கட்சிக்கு வெற்றி  கிடைத்துள்ளது. இங்கு வாக்குகள் முழுமை யாக எண்ணப்பட்டு முடிக்கவில்லை. ஆனால்,  இடதுசாரி வேட்பாளரை விட 35 விழுக்காடு வாக்கு கள் அதிகமாகப் பெற்று வலதுசாரி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகக்குறைவான மக்கள் தொகையே இந்த மாகாணத்தில் உள்ளது. மெக்சிகோவில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ளது. இதனால் பெரும் மக்கள் தொகையைக் கொண்ட மெக்சிகோ மாகாணத்தில் இடதுசாரிக் கட்சியான மொரேனா வெற்றி பெற்றுள்ளது முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியாக மீண்டும் இடது சாரி வேட்பாளரே தேர்வு செய்யப்படுவார் என்ப தையே இது காட்டுகிறது என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிவுகள் பற்றிக் கருத்து தெரி வித்துள்ள இளம் வாக்காளர்களில் ஒருவரான அடெய்ர் ஓர்ட்டிஸ் ஹெர்ரிரா, “ஒரு புதிய பாதை யில் அரசியல் செல்கிறது என்பதைத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே உணர்ந்தோம்” என்கிறார்.  
 

;