world

img

ஈக்வடார் நாட்டின் பெண் மேயர் சுட்டுக்கொலை

ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடார் நாட்டின் மேயராக பதவி வகித்து வந்தவர் பிரிஜிட் கார்சியா(27). கடந்த ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் பிரிஜிட் கார்சியா அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், மேயர் பிரிஜிட் கார்சியா(27) மற்றும் அவருடன் சென்ற தகவல்தொடர்பு இயக்குநர் ஜெய்ரோ லூர் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் கார்சியா மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெய்ரோ லூர் ஆகியோரது உடல்கள் கார் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அரசியல்வாதிகளைக் குறிவைத்து கொலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்மேயர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

;