world

img

டொமினிக்கன்: விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் குடும்பம் உள்ளிட்ட 9 பேர் பலி

டொமினிக்கன் நாட்டில் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான் சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானத்தை மீண்டும் இசபெல்லா விமான நிலையத்திலேயே அவசரமாக விமானி தரையிறக்கியுள்ளார். 
அவசர தரையிறக்கத்தின் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;