world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் 3.5 சதவீதம் உயர்வு 

2025 இன் முதல் 7 மாதத்தில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் 25.7 டிரில்லியன் யுவானாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 3.5 சதவீதம் அதிகம். சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் முதலிடத்தில் 9.4 சதவீத அளவில் ஆசியான் அமைப்பு நாடுகளும். இரண்டாவது இடத்தில் 3.9 சதவீத அளவில் ஐரோப்பிய நாடுகளும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.1 சதவீதம் குறைந்து மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைத்துள்ள நாடுகள் 5.5 சதவீதம் பங்களிக்கின்றன.

இலங்கை முன்னாள் அமைச்சர்  ஊழல் குற்றச்சாட்டில் கைது

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேவின் அண்ணன் மகனும்  முன்னாள் அமைச்சருமான சசீந்திரா ராஜ பக்சே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட் டுள்ளார். ஜேவிபி தலைமையிலான புதிய இலங்கை அரசு முன்னாள் ஆட்சியாளர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப் படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன் படி அனுரகுமார ஆட்சிக்கு வந்தபிறகு கைதுசெய் யப்பட்ட முதல் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் சசீந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல் சூழ்ச்சிக்கு அடிபணியும் லெபனான் அரசு   

மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை தீவி ரப்படுத்தும் வகையில் அமெரிக்கா இஸ்ரேல் போட்ட சூழ்ச்சிகரமான திட்டத்திற்கு லெப னான் அரசு அடிபணிந்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதி ரான பிரதான ஆயுதம் ஏந்திய அமைப்பாக லெப னானின் ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது. இவ்வ மைப்பை நிராயுதபாணியாக மாற்றுவது என அமெ ரிக்கா ஒரு சூழ்ச்சி நிறைந்த திட்டத்தை முன்வைத் துள்ளது. லெபனான் அமைச்சரவை இந்த திட்டத் தை ஏற்றுக்கொண்ட நிலையில் இஸ்ரேல் லெபனா னில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

உலக வர்த்தக அமைப்பில் பிரேசில் முறையீடு 

டிரம்ப் விதித்துள்ள அதிகபட்ச வரிகளை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் (WTO) பிரேசில் முறையிட்டுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் மற்றும் 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 உள்ளிட்ட அமெ ரிக்க சட்டங்களின் அடிப்படையில், 2025 ஏப்ரல் 2 மற்றும் ஜூலை 30, அன்று டிரம்ப் விதித்த இரண்டு நிர்வாக உத்தரவுகளை எதிர்த்து பிரே சில் முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த வரி விதிப்பானது, உலக வர்த்தக அமைப்பில்அமெ ரிக்கா ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை மீறுகிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

போதிய நிதி இல்லை: ஐ.நா எச்சரிக்கை 

மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதிய நிதி கிடைக்கவில்லை என ஐ.நா., எச்சரி க்கை விடுத்துள்ளது. உலகளவில் பேரிடர், வறுமை, பஞ்சம் என பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கான மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான 46 பில்லியன் அமெரிக்க டாலர்களில் (ரூ.40,000 கோடி) 17 சதவீதத்திற்கும் குறைவான பணமே தற்போது வரை கிடைத்துள்ளது என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டு பெற்ற நிதியுடன் 40 சதவீதம் குறைவு. இதனால் போதிய உதவிகள் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் பலியாகும் அபாயம் உரு வாகியுள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் இருந்து மக்களுக்காக சீன அரசின் ஐந்தாண்டுத் திட்டம் : 31 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகள்

பெய்ஜிங். ஆக.8- 2026 முதல் 2030 வரையிலான சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்காக  சீன அரசு சுமார் 31,13,000 க்கும் அதிகமான ஆலோ சனைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.  இது கடந்த கால ஐந்தாண்டு திட்டங்களை வகுக்க சீன அரசுக்கு கிடைத்த ஆலோசனைகளை விட மூன்று மடங்கு அதிகமாகும். கடந்த 2020 இல் 14 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்க வும் இணையதளம் மூலமாகவே மக்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டன. அப்போது 10 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகள் பெறப்பட்டன. ஆனால், இந்த முறை கிடைத்தி ருக்கும் ஆலோசனைகளின் எண்ணிக்கையா னது சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் மக்களு டனான தொடர்பை மேலும் நெருக்கமாக ஆக்கி யுள்ளதை வெளிப்படுத்துவதுடன், திட்டம் வகுப் பதில் மக்களின் அபாரமான பங்களிப்பு மற்றும் அவர்கள் அடைந்துள்ள விழிப்புணர்வையும் பிரதிபலிக்கிறது.

மக்களின் கருத்துக்களைக் கேட்டு நடப்போம்- ஜி ஜின்பிங்

ஐந்தாண்டுத் திட்டம் தீட்டுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதானமாக மக்களின் கருத்து களையே சார்ந்துள்ளது. அதிலிருந்தே சீன அரசு திட்டங்களை வகுக்கிறது. இந்நிலையில் அந் நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், அதிகளவிலான மக்களின் பங்கேற்பு தான், விரிவான நடைமுறை கொண்ட மக்கள் ஜனநாயகத்தற்கு ஒரு சிறந்த உதாரணமாகும் என்று தெரிவித்திருந்தார்.  அதன்படி, ஐந்தாண்டு திட்டத்திற்காக “மக்க ளின் கருத்துக்களையும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளையும் நுணுக்கமாக ஆராய வேண்டும்  மக்களின் குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். சீன பாணியிலான நவீனமயமாக்கலை முன்னெ டுத்துச் செல்லவும், சிறந்த வாழ்க்கைக்கான மக்க ளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் மக்களின் அறிவுக் கருத்துக்களை திரட்ட வேண்டும் என்று அரசு அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு ஆலோசனை கேட்கும் செயல்முறை பற்றி முன்பே அறிவுறுத்தியிருந்தார்.  இதன் பின்னணியில் 2025 மே 20 - ஜூன் 20 வரை, அரசு ஊடகங்களின் இணையதளங்கள், மாகாண, உள்ளூர் அரசு இணையதளங்கள் என பல்வேறு அரசு இணையதளங்கள் மூலமாக தொ ழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், கிராமப்புற மேம்பாடு மற்றும் பொ துவான வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் மக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.