பெய்ஜிங் சீனாவின் செயற்கை நுண்ண றிவு (AI) நிறுவனமான டீப்சீக் புதிதாக டீப்சீக்-ஆர்1 (DeepSeek-R1) என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனைத் தொ டர்ந்து தொழில் நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெ ரிக்காவின் ஓபன் ஏஐ (open AI) கூகுள் நிறுவனத்தின் ஜெமினி உள்ளிட்ட பல செயற்கை நுண்ண றிவு நிறுவனங்கள் ஆட்டம் காணத்துவங்கியுள்ளன. டீப்சீக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த செயற்கை நுண்ணறிவு தளம் அமெரிக்க நிறுவனங்களுக்கு மாற்றாகவும், வலிமையான போட்டியாளரா கவும், பயனர்களுக்கு தேவை யான வகையிலும் உள்ளது. அதை விட மிக முக்கியமானது இந்த தளமானது ஓபன் சோர்ஸ் (open source) தளமாகும். இந்த செயற்கை நுண்ண றிவு தளம் பன்முக வேலைகளை யும் செய்யும் என கூறப்படுகிறது. ஓபன்-ஏஐ மற்றும் கூகுள் நிறு வனத்தின் ஜெமினி ஆகியவை குறிப்பிட்ட சேவையை தான் இலவசமாக தரும். அதற்கு மேல் பயனர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அதிக கட்டண முறையை சீனாவின் டீப்சீக் நிறுவனம் சுக்கு நூறாக உடைத்தெறிந்துள்ளது. இத னால் கோடிக்கணக்கான மக்கள் சீனாவின் செயற்கை நுண்ண றிவை பயன்படுத்தத் துவங்கியுள்ள னர். மேலும் உலகம் முழுவதும் இணைய உலகமும் ஊடக உலக மும் சீன நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் தரமான சேவை குறித்து தவிர்க்க முடியாமல் பேசத் துவங்கியுள்ளன. இந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தரமான திறன் மிகுந்த குறைக்கடத்திகள் (semicon ductors) மிக முக்கியமான தாகும். சீன குறைக்கடத்தி நிறுவ னங்கள் மீது அமெரிக்கா தடை விதித்த பிறகு சீன அரசாங்கம் அத் துறையில் அதிக முதலீடு செய்து திறன் மிகுந்த குறைக்கடத்திகளின் உற்பத்தியை அதிகரித்து வரு கின்றது. இந்த புதிய தளத்தை உலகச் சந்தையில் அறிமுகம் செய்த சில மணிநேரத்தில் அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் துவங்கி உலகம் முழுவதும் பல முன்னணி சிப் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சியை நோக்கி சென்றன. குறைக்கடத்தி உற்பத்தி நிறு வனமான என்விடியா (nvidia) நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16.86 சதவீதம் வரை வீழ்ச்சிய டைந்தன. இதனால் அந்த நிறுவனம் சுமார் 500 பில்லி யன் டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்தது. ஆல்ஃபபெட் மற்றும் மைக்ரோ சாஃப்ட் உள்ளிட்ட பிற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. ஓபன்-ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், டீப்சீக்கின் ஆர்1 செயற்கை நுண்ணறிவை வர வேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதன் குறைந்த விலை குறித்து பாராட்டி யுள்ளார். அத்துடன், தாங்கள் இதே போல மிகவும் சிறந்த முறையில் செயற்கை நுண்ணறிவை வழங்கு வோம் எனவும் ஒரு புதிய போட்டியாளரைப் பெற்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள் ளார்.