world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஆஸ்திரேலியா நீதிமன்றம்  கூகுளுக்கு அபராதம்  

கூகுள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.313 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறு வனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்த  கைபேசிகளில் கூகுள் தேடு பொறி மட்டுமே  பயன்படுத்தும் வகையில் நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. இந்த நிபந்தனையின்படி அந்த கைபேசி பயனர் வேறு தேடு பொறிகளை பயன்படுத்த முடியாது, இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தான் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னணி நாடாக மாறும் - குட்டரெஸ்  

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகின் முன்னணி நாடாக மாறத் தேவையான அனைத்து வளங்களையும் ஆப்பிரிக்கா கொண் டுள்ளது. எனவே வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்கக் கண்டத்தில் புதுப் பிக்கத்தக்க ஆற்ற லுக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று ஐ.நா அவை பொ துச்செயலாளர் அந்தோ ணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஜப்பா னில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் முன்னி லையில்  இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.