world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக  ஆஸ்திரேலியா தகவல்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொது  அவை (UNGA) கூட்டத்தின் போது ஆஸ்திரேலிய அரசு இதனை முறைப்படி அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக அமெரிக்காவின் நெருங்கிய ராணுவக் கூட்டாளிகளான கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவும் தற்போது அறிவித்துள்ளது.

ஏற்றுமதி உரிமம் பெற 15 சதவீத  வருவாயை கொடுக்க ஒப்பந்தம் 

என்விடியா, ஏஎம்டி ஆகிய அமெரிக்க சிப் நிறுவனங்கள் சீனாவில் சிப்கள் விற்பனை செய்து பெறும் வருவாயில் ஒரு பகு தியை அமெரிக்க அரசுக்கு தருவதாக ஒப்பந்த த்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, சீனச் சந்தையில் கிடைக்கும் சிப் விற்பனை வருவா யில் 15 சதவீத பணத்தை அமெரிக்க அரசாங்கத்தி ற்குச் செலுத்த உள்ளன. என்விடியா நிறுவனம் எச்20 சிப்களையும், ஏஎம்டி நிறுவனம் எம்ஐ308 சிப்களையும் சீனாவில் விற்பனை செய்ய ஏற்றுமதி உரிமங்களை பெறுவதற்காக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட பஞ்சம்:  அதிகரிக்கும் பலி எண்ணிக்கை 

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆகஸ்ட் 10 முதல் 11 வரை 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் ராணுவம் பஞ்சத்தை திட்டமிட்டு உருவாக்கி பட்டினியை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு 101 குழந்தைகள் உள்பட 222 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். 

டிரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த  பிரேசில் ஜனாதிபதி லூலா 

பிரேசில் மீது 50 சதவீத வரிவிதித்துள்ள நிலையில் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த லூலா பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா,சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேசிக்கொள்வதாக கூறி டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவை மட்டுமே சார்ந்துள்ள நிலைக்கு மாற்றாக பிரிக்ஸ் கூட்டமைப்பு வலுவாக உருவாகி வரும் நிலையில் லூலாவின் பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மருத்துவ ஊழியர்களை  கொலை செய்த ராணுவம்? 

சிரியாவில் ராணுவ வீரர்கள் மருத்துவமனைக் குள் புகுந்து சுகாதார ஊழியர்களைச் சுட்டுக் கொன்ற காணொலி தற்போது வெளியாகியுள்ளது. சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தேதி குறிப்பிடப்படாமல் இந்த காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ வீரர்கள், மருத்துவமனை ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டினர். ஒரு ஊழியர் இரு முறை சுட்டுக் கொல்லப்படுகிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் சில ஊழியர்களும் தரையில் விழுந்து உயிரிழக்கும் கொடூரக் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. 

பாலஸ்தீனர்களின் குரலாக இருந்த பத்திரிகையாளர் படுகொலை : திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் 

காசா, ஆக.11- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் பால ஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை தாக்குதல்களை வெளி உலகிற்கு கொண்டு சேர்த்த முக்கிய பத்திரிகையாளரான அல் ஜசீரா ஊடகவியலாளர் அனாஸ் அல்-ஷரீப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ஆகஸ்ட் 10, அன்று அல்-ஷிஃபா மருத்துவ மனை வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டி ருந்த பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியது. இந்த தாக்குதலில் அல் ஜசீரா நிறுவனத்தின் செய்தியா ளர் 28 வயதான அனாஸ் அல்-ஷரீப் படுகொலை யானார்.  இத்தாக்குதலில் அனாஸ் அல்-ஷரீப் மட்டு மின்றி, அவரது சக பத்திரிகையாளர்களான முக மது குரைக்கே, இப்ராஹிம் ஜாஹெர், மோமன் அலிவா, முகமது நௌஃபல் ஆகிய நான்கு பேரும் படுகொலை  செய்யப்பட்டுள்ளனர் என அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணு வம் ஒப்புகொண்டது. அதுமட்டுமின்றி அந்த தாக் குதலை திட்டமிட்டு அரங்கேற்றியதாக தெரிவித் துள்ளதுடன் தாக்குதலை நியாயப்படுத்த அனாஸ் அல்-ஷரீப் ஒரு பயங்கரவாதி, அவர் ஹமாஸ் அமைப்பின் தலைவர். அவர் பத்திரிகையாளராக வேஷம் போட்டுள்ளார் என கட்டுக்கதைகளையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.  இஸ்ரேலின் இந்த பொய்குற்றச்சாட்டுகளை அல் ஜசீரா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள் ளது. அனாஸ் அல்-ஷரீப் காசாவின் மிகத் துணிச்ச லான பத்திரிகையாளர்களில் ஒருவர். அனாஸ் அல்-ஷரீப் மற்றும் அவரது சக பத்திரிகையாளர் கள் காசாவில் நிகழும் துயரத்தை இந்த உலகுக்கு சொல்லும் கடைசியாக உள்ள சில குரல்களில் ஒன்றாக இருந்தனர். இந்தத் தாக்குதல் காசாவில் நடக்கும் உண் மைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் குரல்களை ஒடுக்க இஸ்ரேல் மேற்கொள்ளும் ஒரு வீணான முயற்சி என இஸ்ரேலை கண்டித்துள்ளது. காசாவில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் படு கொலை செய்துள்ளது. இஸ்ரேலின் இனப்படு கொலைகளை பற்றி உலகிற்கு மிக தைரியமான கள அறிக்கைகளால் அம்பலப்படுத்திய அல்-ஷரீப் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் ஐ.நா அவையின் நிபுணர் குழுக்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.