world

img

பெருவில் அமெரிக்கப் படைகள்: சீர்குலைவு தொடங்குகிறது

லிமா, ஜூன் 6- தங்கள் நாட்டிற்கு வந்து காவல்துறையினருக்குப் பயிற்சி என்ற பெபரில் உள்நாட்டு எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கப் படைகள் உள்ளே நுழைய பெரு அரசு அனுமதி அளித்திருக்கிறது. பெருவில் இடதுசாரி ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோவை சட்டவிரோதமாகப் பதவிநீக்கம் செய்து விட்டு டினா போலுவார்ட்டே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி காஸ்டில்லோவை சிறையில் அடைத்துள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தங்கள் நாட்டுக்குள் அமெரிக்கப் படைகள் வர பெரு அரசு அனுமதி தந்துள்ளது. தங்கள் ஆயுதப் படைகளுக்கும், தேசியக் காவல்துறைக்கும் பயிற்சி தரவே அமெரிக்கப் படைகள் வருகின்றன என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெருவில் உள்ள 15க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளூர் படைகளோடு இணைந்து அமெரிக்கப் படைகள் செயல்படவிருக்கின்றன. பல குழுக்களாக அமெரிக்கப் படைகள் வரப் போகின்றன. அமெரிக்கப் படையின் 970 வீரர்கள் அடங்கிய குழுதான் வரவிருப்பதிலேயே மிகப்பெரிய குழுவாகும். தங்கள் போர் விமானங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றோடு பெருவுக்குள் நுழைகிறார்கள். வலதுசாரிகளின் சட்டவிரோத ஆட்சிக்கு ஆதரவாக அந்நாட்டின் இறையாண்மையைக் குலைக்கும் வேலையில் அமெரிக்கப் படைகள் களமிறங்கியுள்ளன.

;